கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி திடீரென உயிரிழப்பு; தோட்ட நிர்வாக செயற்பாடுகளைக் கண்டித்து பத்தனையில் ஆர்ப்பாட்டம்!

(க.கிஷாந்தன்)

திம்­புள்ள பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பத்­தனை போகா­வத்தை தோட்­டத்தில் தொழி­லாளி பெண் ஒருவர் தொழில் நட­வ­டிக்­கையின் போது திடீ­ரென மார­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்பில் அத்­தோட்ட தொழி­லா­ளர்கள் தோட்ட நிர்­வா­கத்­துக்கு எதி­ராக கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.


இந்த ஆர்ப்­பாட்டம்  பத்­தனை போகா­வத்தை தோட்­டத்தில் தொழில் புரியும் தோட்ட தொழி­லா­ளர்­க­ளினால் தோட்ட தொழிற்­சா­லைக்கு முன்­பாக இன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இத் தோட்­டத்தில் மேல­திக கொழுந்து பறிக்கும் நட­வ­டிக்­கைக்­காக பெண் தொழி­லா­ளர்­களை ஈடு­ப­டுத்­திய போது அவர்­க­ளுக்கு தோட்ட நிர்­வா­கத்­தினால் பாண் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு வழங்­கப்­பட்ட பாணை உட்­கொண்ட பெண் தொழி­லாளி ஒருவர் குடிநீர் அருந்­து­வ­தற்கு வச­தி­யற்ற நிலையில் இவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த பெண்­ம­ணியை நாவ­லப்­பிட்டி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயி­ரி­ழந்­த­தாக தெரி­விக்­கப்­பட்டு தொழி­லா­ளர்கள் தோட்ட நிர்­வா­கத்­திற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டத்தில் குதித்­தனர்.

போகா­வத்தை தோட்­டத்தில் அம்­புலன்ஸ் வண்டி இல்­லா­ததன் கார­ண­மாக குறித்த நேரத்தில் பெண்ணை நாவ­லப்­பிட்டி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இவரின் உயிர் பிரிந்திருப்பதாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரி வித்தனர்.

(Visited 43 times, 1 visits today)

Post Author: metro