மாட்டிறைச்சிக் கடையை 32 இலட்சம் ரூபா குத்தகைக்குப் பெற்ற பௌத்த பிக்கு

ரெ. கிறிஷ்­ணகாந்

மத்­து­கம நக­ரி­லுள்ள மாட்­டி­றைச்சி கடை ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் சுமார் 32 இலட்சம் ரூபா குத்­தகை அடிப்­ப­டையில் பெற்­றுள்­ள­தாக மத்­து­கம பிர­தேச சபை செய­லாளர் அசோக ரண­சிங்க தெரி­வித்­துள்ளார்.

மத்­து­கம பிர­தேச சபைக்கு சொந்­த­மான மாட்­டி­றைச்சிக் கடையை விலை­ம­னுக்­கோரல் அடிப்­ப­டையில் 22, 60, 000 ரூபா­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 2018 ஆம் ஆண்­டுக்­கான ஆகக் குறைந்த கேள்வித் தொகை 24, 86, 165 ரூபா­வென நிய­மிக்­கப்­பட்டு பிர­தேச சபை­யினால் கேள்­வி­ம­னு­கோ­ரப்­பட்­டி­ருந்­தது.

அதற்­க­மைய தற்­போது அக்­க­டையை நடத்­தி­வரும் முஸ்லிம் வர்த்­த­க­ரொ­ரு­வ­ராலும், பிக்கு ஒரு­வ­ராலும் தத்­த­மது கேள்­வி­மனு பத்­தி­ரங்­களை சமர்ப்­பித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில், கடந்த 27 ஆம் திகதி இரு­வ­ரது பத்­தி­ரங்கள் பரீட்­சிக்­கப்­பட்ட வேளையில் தற்­போ­தைய முஸ்லிம் வர்த்­தகர் 27, 16, 000 ரூபா­வுக்­கான கேள்வி மனுவை முன்­வைத்­தி­ருந்த நிலையில் மாவிட்ட ஞான­ரத்ன என்ற பிக்கு 32, 25, 622 ரூபா கேள்­வி­ம­னுவை முன்­வைத்­தி­ருந்தார். அதற்­க­மைய மத்­து­கம நக­ரி­லுள்ள மாட்­டி­றைச்­சிக்­கடை வர­லாற்றில் முதன் முறை­யாக பௌத்த பிக்கு ஒரு­வ­ருக்கு குத்­தகை அடிப்­ப­டையில் கிடைத்­துள்­ளது.

மாட்­டி­றைச்சி கடையை குத்­த­கைக்கு பெற்­றுள்ள மாவிட்ட ஞான­ரத்ன தேரர் தெரி­விக்­கையில், மத்­து­கம நக­ரி­லுள்ள மாட்­டி­றைச்சிக் கடையை மூடு­மாறு 2015 ஆம் ஆண்டும் அதற்கு பிந்­திய காலப்­ப­கு­தி­யிலும் பிர­தேச சபையை கோரி­யி­ருந்­த­போ­திலும் சட்­ட­ரீ­தி­யான சிக்கல் காணப்­ப­டு­வதால் அவ்­வாறு மூட இய­லாது என தெரி­வித்­தனர். அதற்­க­மைய 2018 ஆம் ஆண்­டுக்­காக இறைச்­சிக்­க­டையை குத்­த­கைக்கு எடுத்து நக­ர­ச­பைக்கு வரியை செலுத்தி குறித்த இறைச்சிக் கடையை மூடு­வ­தற்­கான நட­வ­டிக்­கையை எடுப்பேன்.

தெற்­கா­சி­யா­வி­லேயே மிக உய­ர­மான புத்தர் சிலை காணப்­படும் மத்­து­கம புனித நகரில் வாரச்­சந்தை இடம்­பெறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமை நாட்­களில் நாளொன்­றுக்கு ஏறக்­கு­றைய 2 மாடு­களின் இறைச்சி விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தனால் தான் இந்த நட­வ­டிக்­கையை எடுத்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, இவ்­வி­டயம் தொடர்பில் மத்­து­கம பிர­தேச சபை செய­லாளர் அசோக ரண­சிங்க தெரி­விக்­கையில், அதிக விலைக்கு கேள்­விப்­பத்­திர அடிப்­ப­டையில் மாட்­டி­றைச்சி கடையை பிக்கு குத்­த­கைக்கு பெற்­றுள்ள போதிலும் குத்­தகை தாரர் குத்­தகை நிபந்­த­னை­க­ளுக்­க­மைய செயற்­பட வேண்டும்.

அதற்­க­மைய 7 நாட்­க­ளுக்கு மேலாக கடையை மூடி வைக்க முடி­யா­தெ­னவும், அதனை மீறும் வகையில் செயற்­பட்டால் ஒப்­பந்தம் நிரா­க­ரிக்­கப்­படும் எனவும் அவர் பிக்கு குத்­த­கைக்கு பெற்றுள்ள போதிலும் குத்தகை தாரர் குத்தகை நிபந்தனைகளுக்கமைய செயற்பட வேண்டும். அதற்கமைய 7 நாட்களுக்கு மேலாக கடையை மூடி வைக்க முடியாதெனவும், அதனை மீறும் வகையில் செயற்பட்டால் ஒப்பந்தம் நிராகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 54 times, 1 visits today)

Post Author: metro