3 ஆவது நாளாகவும் முடங்கிய சாய்ந்தமருது; நகரம் எங்கும் கறுப்புக் கொடி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­காக தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத்தை உட­ன­டி­யாக வர்த்­த­மானி மூலம் பிர­க­டனம் செய்­யு­மாறு வலி­யு­றுத்தி இன்று மூன்­றா­வது நாளாகவும் அங்கு பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

இதன் கார­ண­மாக இப்­பி­ர­தே­சங்­களில் வர்த்­தக நிலை­யங்கள், பொதுச் சந்­தைகள் திறக்­கப்­ப­ட­வில்லை. அரச நிறு­வ­னங்கள், பாட­சா­லைகள், அரச தனியார் வங்­கிகள் இயங்­க­வில்லை. இதனால் பொதுப் போக்­கு­வ­ரத்து சேவைகள் முற்­றாக ஸ்தம்­பித்­தி­ருந்­தன.

சாய்ந்­த­ம­ருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்­டப்­பட்­டுள்­ள­துடன் பல்­வேறு கோஷங்கள் அடங்­கிய பதாகை­க
ளும் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

(Visited 40 times, 1 visits today)

Post Author: metro