ஹரீஷ் ஜோடியாகும் ரைஸா

விஜய் டிவியில் ஒளி­ப­ரப்­பான ‘பிக் ெபாஸ்’ நிகழ்ச்­சியில் பங்­கேற்ற போட்­டி­யா­ளர்கள் அனை­வ­ருக்­குமே மக்கள் மத்­தியில் நல்ல புகழ் கிடைத்­தது. மற்ற போட்­டி­யா­ளர்­களைக் காட்­டிலும் தன்­னு­டைய இயல்­பான நட­வ­டிக்­கையால் ஓவியா ‘பிக் ெபாஸ்’ போட்­டியில் பாதியில் வெளி­யே­றி­னாலும் ஒரு ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

பிக்ெபாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஓவியாவை அடுத்து ரைசாவுக்கு அதிக ரசிகர்களின் ஆதரவு இருந்தது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்குகளையும் டீசண்டாக விளையாடியவர்களில் ஒருவர் ஹரிஷ். இருவரும் பிக்ெபாஸ் இல்லத்தில் இருந்தபோதே நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் தற்போது இருவரும் திரையில் ஜோடியாகியுள்ளனர்.

‘கிர­கணம்’ என்ற படத்தை இயக்­கி­யுள்ள இளன் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்­தில்தான் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்­ளார்­களாம்.

இந்தப் படத்­திற்கு யுவன்­ஷங்கர் ராஜா இசை­ய­மைக்க சம்­மதம் தெரி­வித்­துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த புதிய படத்தின் முதல் பார்வை வெளி­யாக உள்­ளது. ‘பிக் ெபாஸ்’ போட்­டி­யா­ளர்­களின் முதல் ஜோடிப் பட­மாக இப்­படம் தயா­ராகப் போகிறது. விரைவில் இன்னும் பல போட்டியாளர்களின் பட அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

(Visited 71 times, 1 visits today)

Post Author: metro