பெண்ணுடன் கள்ளத் உறவு வைத்திருந்த படை வீரரை தாக்கி பற்களை உடைத்த கணவனும் தந்தையும் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)

மத்­திய கிழக்கு நாடு ஒன்றில் பணி­யாற்றி இலங்கை திரும்­பிய 42 வய­தான திரு­ம­ண­மான பெண் ஒரு­வ­ருடன் கள்ளத் தொடர்பைப் பேணி­வந்த இளம் வயது இரா­ணுவ வீரர் ஒரு­வரை பற்கள் உடையும் அள­வுக்கு தாக்­கிய, அப்­பெண்ணின் சட்­டப்­ப­டி­யான கண­வ­ரையும் மாம­னா­ரையும் அநு­ரா­த­புரம் தலைமை பொலிஸ் நிலை­யத்தின் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

இப்­பெண்­ணுடன் கள்­ளக்­கா­தலில் ஈடு­பட்­டு­வந்த 32 வய­தான இரா­ணுவ வீரர் அநு­ரா­த­புரம் யாழ்ப்­பாணச் சந்­தியில் இவ்­வாறு கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­தை­ய­டுத்து சில தினங்கள் அனு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வெளி­யேறி, தான் தாக்­கப்­பட்­டமை குறித்து அநு­ரா­த­புரம் தலைமை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

நீண்­ட­கா­ல­மாக இந்த இரா­ணுவ வீரரும் 42 வய­தான பெண்ணும் காத­லித்­து­வந்­தி­ருந்த நிலையில் அண்­மையில் இரு­வரும் கணவன் மனை­வி­யாக இணைந்து வாழ முயற்­சித்­துள்­ள­தா­கவும், அப்­பெண்­ணுக்கு 22 வய­தான மக­னொ­ருவர் காணப்­ப­டு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இப்­பெண்ணை அவ­ரது சட்­டப்­ப­டி­யான கணவர் மிகவும் அன்­புடன் கவ­னித்­து­வந்­த­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்த அதே­வேளை, இரா­ணுவ வீர­ருடன் காணப்­பட்ட காதலில் அதிக ஈர்ப்பு ஏற்­பட்­டதன் கார­ண­மாக அவ­ருடன் இணைந்து வாழத் தீர்­மா­னித்து அப்பெண் தனது கண­வரை விட்டுச் சென்­றுள்ளார்.

இத­னை­ய­டுத்து, தனது வீட்­டி­லுள்ள அப்­பெண்ணின் பொருட்கள் அனைத்­தையும் எடுத்துச் செல்­லு­மாறு அவ­ரது சட்­டப்­ப­டி­யான கணவர் இரா­ணுவ வீர­ருக்கு அறி­வித்­துள்ளார். அதற்­க­மைய தனது காத­லி­யுடன் பொருட்­களை எடுத்துச் செல்­வ­தற்­காக அவ­ரது வீட்­டுக்கு சென்­றி­ருந்த வேளையில் இரா­ணுவ வீரர் கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

(Visited 94 times, 1 visits today)

Post Author: metro