நியூயோர்க் தாக்குதலையடுத்து கிறீண்காட் வீசா லொத்தர் திட்டத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

நியூயோர்க் தாக்­கு­த­லை­ய­டுத்து அமெ­ரிக்க குடி­வ­ர­வா­ளர்கள் சட்­டத்தை கடு­மை­யாக்­கப்­போ­வ­தாக ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

இதன்­படி கிறீண்காட் வீசா லொத்தர் திட்டத்தை ரத்­து­செய்­து­விட்டு அதற்குப் பதி­லாக தகுதி அடிப்­ப­டையில் வெளி­நாட்­ட­வர்கள் அமெ­ரிக்­காவில் நிரந்­த­ர­மாக வந்து தங்­கு­வ­தற்கு அனு­ம­திக்கும் திட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் அவர் கூறியுள்ளார்.

லொத்தர் திட்­டத்தை ரத்து செய்ய உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டி­யாக நாடா­ளு­மன்­றத்­திடம் கோரப்­போ­வ­தா­கவும் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­ப­வத்தில் உஸ்­பெ­கிஸ்­தானைச் சேர்ந்த சைபுல்லோ சைபொவ் என்­பவர் நியூ­யோர்க்­கின் லோவர் மன்­ஹாட்டன் பகு­தியில் சைக்­கி­ளோட்­டிகள் மற்றும் பாத­சா­ரிகள் மீது பிக்கெப் வாக­னத்­தினால் மோதி­யதில் 8 பேர் கொல்­லப்­பட்­டனர்.

சந்­தேக நபர் 2010 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவின் கிறீண்காட் வீசா லொத்தர் திட்டத்தின் மூலமே நியூயோர்க் சென்­ற­தாக கூறப்­ப­டு­கிறது.

தாக்­கு­தலை நடத்­திய சைபுல்­லோவை ஒரு மிருகம் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி கடு­மை­யாகத் தாக்கிப் பேசி­யுள்­ள­துடன், அவரை குவான்­த­னாமோ இரா­ணுவச் சிறை முகா­முக்கு அனுப்­பப்­போ­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். அதே­வேளை, பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் விட­யத்­தி­லான அமெ­ரிக்க சட்­டம் சிரிப்­புக்­கி­ட­மா­னது எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இந்தப் பயங்­க­ர­வாதத் தாக்­குதலுக்கு செனட் சபையின் ஜன­நா­யகக் கட்சி உறுப்­பினர் சக் ஷூமரை அமெரிக்க ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1990 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கிறீண்காட் வீசா லொத்தர் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்த உத­வியவர்­களுள் ஷூமரும் ஒருவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

(Visited 52 times, 1 visits today)

Post Author: metro