வீதியில் சென்ற பெண்ணை பகிடி செய்த விவகாரத்தால் ஆணும் பெண்ணும் கொலை

(ரெ.கிறிஷ்­ணகாந்)

வீதியில் சென்று கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை பகிடி செய்த சம்­பவம் வாக்­கு­வா­த­மாக மாறி­யதில் இருவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்தச் சம்­பவம் கொக­ரெல்ல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்தச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, வீதியில் சென்று கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை பகிடி செய்த சம்­பவம் வாக்­கு­வா­த­மாக மாறி­யதில் பின்னர் பகிடி செய்த நபர் அப் ­பெண்ணை கத்­தியால் குத்திக் கொலை செய்­துள்ள நிலையில் அதனைக் கண்ட அப்­ பெண்ணின் கணவர், தனது மனை­வியை தாக்­கி­கொலை செய்த நபரை கத்­தியால் குத்திக் கொலை செய்த சம்­பவம் தொடர்பில் கொக­ரெல்ல பொலிஸார் விரி­வான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

கடந்த 31 ஆம் திகதி கொக­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மெல்­சி­றி­புர, பல்­லி­யத்த, ஹெவ­ன­தென்­னள கிரா­மத்தை சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது வீடு நோக்கி சென்று கொண்­டி­ருந்த வேளையில் நப­ரொ­ருவர் அவரைப் பார்த்து ‘ஆ தங்கை நீங்கள் எல்­லோரும் இப்­போது நன்­றாக உண்டு, குடிக்­கின்­றீர்கள், இப்­போது நீங்கள் பெரிய ஆட்கள் அல்­லவா” என கேலி செய்­த­தை­ய­டுத்து அப்பெண் அதற்கு கடுங்­கோ­ப­மாக பதி­ல­ளித்­துள்ளார்.

கேலி செய்த நபர் அப்­ பெண்ணின் பதிலை கேட்டு கோப­ம­டைந்து தனது வீட்­டுக்குச் சென்று கத்­தி­யொன்றை எடுத்­து­வந்து குறித்த பெண்ணை துரத்திச் சென்று தாறு­மா­றாக தாக்­கி­யுள்ள நிலையில் பலத்த காய­ம­டைந்த அப்­பெண்ணை அய­ல­வர்கள் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முயற்­சித்­தி­ருந்­த­போது இந் ­நபர் கத்­தியை காட்டி அவர்­களை மிரட்­டி­யுள்ளார்.

இதனைக் கேள்­வி­யுற்­ற­தை­ய­டுத்து அப்­ பெண்ணின் கணவர் சம்­பவ இடத்­துக்கு விரைந்து இரத்த வெள்­ளத்தில் மிதந்த தனது மனை­வியைக் காப்­பாற்ற முயற்­சித்­தி­ருந்த போது அப்­ பெண்ணை கத்­தியால் குத்­திய நப­ருக்கும் கண­வ­ருக்கும் இடையில் கைக்­க­லப்பு ஏற்­பட்­டி­ருந்த நிலையில் கண­வரின் கையி­லி­ருந்த கத்­தியால் அந்­ந­பரை குத்தி காயப்­ப­டுத்­தி­யதில் அவர் அவ்­வி­டத்­தி­லேயே விழுந்­துள்­ள­தாக கொக­ரெல்ல பொலி­ஸாரின் ஆரம்ப விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து, சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த ஆண் மற்றும் பெண் ஆகியோர் கொக­ரெல்ல மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட வேளையில் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்த குறித்த ஆண் உயி­ரி­ழந்­துள்ளார்.

அந் ­ந­பரின் தாக்­கு­தலில் காய­ம­டைந்த பெண் கொக­ரெல்ல வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்­று­வந்த நிலையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள், மெல்­சி­றி­புர.ஹெவ­ன­தென்ன பிர­தே­சத்தை சேர்ந்த இரு பிள்­ளை­களின் தந்­தை­யான அஜித் குமார திஸா­நா­யக்க (36) மற்றும் இரு பிள்­ளை­களின் தாயான அனோமா மல்­காந்தி (37) ஆகி யோருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொலையுண்ட பெண்ணுக்கு 9 மாதக் குழந்தையொன்றும் இருப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் கணவரைக் கைது செய்துள்ள கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 76 times, 1 visits today)

Post Author: metro