மெல்பர்ன் ரெனிகேட்ஸுடன் ஒப்பந்தமானார் சமரி

இலங்­கையின் அதி சிறந்த கிரிக்கெட் வீராங்­கனை விருதை வென்­றெ­டுத்த 48 மணித்­தி­யா­லங்­களில் சமரி அத்­தப்­பத்து, அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெ­ற­வுள்ள மகளிர் பிக் பாஷ் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாட ஒப்­பந்­த­மா­கி­யுள்ளார்.

இதன்மூலம் பிக் பாஷ் கிரிக்கெட் போட்­டியில் விளை­யாட ஒப்­பந்­த­மான முத­லா­வது இலங்கை வீராங்­கனை என்ற பெரு­மையை சமரி அத்­தப்­பத்து பெறு­கின்றார்.

மகளிர் பிக் பாஷ் மூன்­றா­வது அத்­தி­யா­யத்தில் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியில் விளை­யா­டு­வ­தற்­கா­கவே சமரி அத்­தப்­பத்து ஒப்­பந்­த­மா­கி­யுள்ளார்.

‘‘மெல்பர்ன் வருகை தந்து ரெனிகேட்ஸ் அணியில் விளை­யா­டு­வ­தை­யிட்டு நான் பெரு­ம­கிழ்ச்சி அடை­கின்றேன். பிக் பாஷ் போட்டி என்­பது மிகப் பெரிய, முக்­கிய கிரிக்கெட் தொட­ராகும்.

மேலும் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எண்­ணற்ற இர­சி­கர்கள் இருப்­பார்கள். அவர்­க­ளது ஆத­ரவு கிடைப்­பது பெரிய விட­ய­மாகும்’’ என மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணி­யி­ன­ரிடம் சமரி அத்­தப்­பத்து கூறினார்.

இங்­கி­லாந்தில் நடை­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக ப்றிஸ்டல் மைதா­னத்தில் ஆட்­ட­மி­ழக்­காமல் 178 ஓட்­டங்­களைக் குவித்த சமரி அத்­தப்­பத்து, ஆங்­கி­லேய இ 20 லீக் தொடரில் முத­லா­வது இலங்கைப் பெண்­ணாக யோர்­க்ஷயர் டயமண்ட்ஸ் அணிக்­காக சமரி அத்­தப்­பத்து விளை­யா­டி­யி­ருந்தார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விரு­து­வி­ழாவில் அதி­சி­றந்த கிரிக்கெட் வீராங்­கனை விருதை வென்­றெ­டுத்த சமரி அத்­தப்­பத்து, மகளிர் சர்­வ­தேச ஒருநாள் மற்றும் மகளிர் சர்­வ­தேச இருபது 20 ஆகிய இருவகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதி சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருது களையும் சொந்தமாக்கிக்கொண்டிருந்தார்.

(Visited 70 times, 1 visits today)

Post Author: metro