டயலொக் றக்பி ப்றீமியர் லீக் நாளை ஆரம்பம்

(நெவில் அன்­தனி)

இலங்­கையின் எட்டு முன்­னணி றக்பி கழ­கங்கள் பங்­கு­பற்றும் டயலொக் றக்பி ப்றீமியர் லீக் ஏ பிரிவு போட்­டிகள் நடப்பு சம்­பியன் கண்டி கழ­கத்­திற்கும் முன்னாள் லீக் சம்­பி­யனும் புதுப்­பொ­லிவு பெற்­றுள்ள சீ. எச். அண்ட் எவ். சி. கழ­கத்­திற்கும் இடை­யி­லான போட்­டி­யுடன் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இப் போட்டி மெய்ட்லண்ட் க்ரசென்ட் மைதா­னத்தில் நாளை பிற்­பகல் 4.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. கண்டி கழ­கத்­திற்கு கயான் வீர­ரட்­னவும் சீ. எச். கழ­கத்­திற்கு ரோஹித்த ராஜ­ப­க்ஷவும் அணித் தலை­வர்­க­ளாக விளை­யா­டு­கின்­றனர்.

அணித் தலை­வர்கள் இட­மி­ருந்து வல­மாக ரசித் ஜயங்க சில்வா (பொலிஸ்), ரோஹித்த ராஜ­பக்ஷ (சீ.எச்.). கவிந்து பெரேரா (சீ.ஆர்.), ஜேசன் ஷெஹான் மெல்டர் (ஹெவ்லொக்ஸ்), கயான் வீர­ரட்ன(கண்டி), தனுஷ்க பெரேரா (கடற்­படை), எஸ். புஷ்­ப­கு­மார (விமா­னப்­படை), துசித் பண்­டார சேனா­நா­யக்க (இராணுவம்)


இவ் வருட டயலொக் றக்பி ப்றீமியர் லீக் போட்­டி­களில் கண்டி விளை­யாட்டுக் கழகம், ஹெவ்லொக்ஸ் விளை­யாட்டுக் கழகம், சீ. ஆர். அண்ட் எவ். சி., சீ. எச். அண்ட் எவ். சி., பொலிஸ் விளை­யாட்டுக் கழகம், இரா­ணுவ விளை­யாட்டுக் கழகம், கடற்­படை விளை­யாட்டுக் கழகம், விமா­னப்­படை விளை­யாட்டுக் கழகம் ஆகியன விளை­யா­டு­கின்­றன.

இவ் வருடம் ஆறா­வது தட­வை­யாக டயலொக் றக்பி ப்றீமியர் லீக் மற்றும் கிளிபர்ட் கிண்ண நொக் அவுட் றக்பி போட்­டி­க­ளுக்கு டயலொக் ஆசி­யாட்டா நிறு­வனம் பூரண அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது.

 

(Visited 28 times, 1 visits today)

Post Author: metro