பாஸ்ட் அன்ட் பியூரியஸில் ஜோன்சன் நடித்தால் நான் விலகிவிடுவேன் – டைரிஸ் கிப்ஸன்

பாஸ்ட் அன்ட் பியூ­ரியஸ் படத்தின் புதிய பாகத்தில் நடிகர் ட்வைன் ஜோன்ஸன் நடித்தால் அப்­ப­டத்­தி­லி­ருந்­துதான் விலகப் போவ­தாக நடிகர் டைரிஸ் கிப்ஸன் தெரி­வித்­துள்ளார்.


பாஸ்ட் அன்ட் பியூ­ரியஸ் படத்தின் 8 ஆவது பாகம் வசூலில் பெரு வெற்­றி­யீட்­டி­ய­தை­டுத்து 9 ஆவது பாகத்தை தயா­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

ஆனால், இப்­ப­டத்தின் பிர­பல நடி­கர்­களில் ஒரு­வ­ரான தி ரொக் எனும் ட்வைன் ஜோன்ஸன் 9 ஆவது பாகத்தில் நடித்தால் தான் அதில் நடிக்கப் போவ­தில்லை என டைரிஸ் கிப்ஸன் தெரி­வித்­துள்ளார்.

பாஸ்ட் அன்ட் பியூ­ரியஸ் திரைப்­படக் குடும்­பத்தை கைவிட்டு தனி­யாக படத்தில் நடிக்கச் சென்­ற­தாக ட்வைன் ஜோன்ஸன் மீது நடிகர் டைரிஸ் கிப்ஸன் ஏற்கெனவே விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

(Visited 162 times, 1 visits today)

Post Author: metro