நடிகை ரோஸ் மெக்கோவன் மீதான பிடியாணை குறித்து மீண்டும் பரவும் செய்திகள் பாலியல் குற்­றச்­சாட்­டு­களை மறைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை என்­கிறார்

ஹொலிவூட் நடிகை ரோஸ் மெக்­கோ­வனை போதைப்­பொருள் குற்­றச்­சாட்டு தொடர்­பாக கைது செய்­வ­தற்கு பல மாதங்­க­ளுக்கு முன் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டமை தொடர்­பான செய்­திகள் மீண்டும் பர­வு­கின்­றன.

ஹொலிவூட் திரைப்­படத் தயா­ரிப்­பாளர் ஹார்வீ வைன்ஸ்டின் மீது பாலியல் குற்­றச்­சாட்டு சுமத்­தி­ய­வர்­களில் ஒருவர் ரோஸ் மெக்­கோவன்.

இந்­நி­லையில் பல மாதங்­க­ளுக்கு முந்­தைய போதைப் பொருள் குற்­றச்­சாட்டு தொடர்­பான இப்­பி­டி­யாணை குறித்த தக­வல்கள் தன்னை மௌன­மாக்­கு­வ­தற்­கான ஒரு முயற்சி என ரோஸ் மெக்­கோவன் தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஜன­வரி மாதம் விமா­ன­மொன்றில் ரோஸ் மெக்­கோவன் விட்­டுச் சென்ற பொருட்கள் தொட­ர்பாக வோஷிங்டன் டி.சி. நகர பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். இதன்­போது அவர் நகரில் போதைப்­பொருள் வைத்­தி­ருந்­த­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து கடந்த பெப்­ர­வரி மாதம் அவரைக் கைது செய்­வ­தற்கு பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஹொலி­வூட்டின் பிர­பல திரைப்­படத் தயா­ரிப்­பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கடந்த மாதம் ரோஸ் மெக்­கோவன் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

இந்­நி­லையில், வைன்ஸ்டீன் விவா­கரம் தொடர்­பாக தன்னை மௌன­மாக்­கு­வ­தற்­காக 8 மாதங்­க­ளுக்கு முந்தைய பிடியாணை குறித்த விவகாரம் மீண்டும் கிளப்பப்படுகிறது எனத் தான் கருதுவதாக 44 வயதான ரோஸ் மெக்கோவன் தெரிவித்துள்ளார்.

(Visited 80 times, 1 visits today)

Post Author: metro