உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர்களில் ஒருவரான சவூதி அரேபிய இளவரசர் அல்வலீத் பின் தலால் உட்பட 11 இளவரசர்கள், 4 அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சவூதி அரேபியா அதிகாரிகளால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது நேற்றுமுன்தினம் செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தலைமையில் புதிய ஊழல் ஒழிப்புக் குழுவை மன்னர் மொஹம்மத் பின் சல்மான் நேற்றுமுன்தினம் நியமித்தார். அதையடுத்து சிறிது நேரத்தில் மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழலுக்கு எதிரான புதிய குழுவின், களையெடுப்பில், சவூதி யின் 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் டசன்களுக்கு அதிகமான முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் உடனடியாக முழுமையாக அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, மற்றொரு நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய இரு முக்கிய துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரான இளவரசர் மிதெப் பின் அப்துல்லாவையும், கடற்படைத் தளபதி அட்மிரல் அப்துல்லா பின் சுல்தான் பின் முகமது அல்-சுல்தானையும் மன்னர் சல்மான் நீக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பதவி நீக்கத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
முன்னாள் மன்னர் அப்துல்லாவின் புதல்வரான இளவரசர் மிதெப், அரியாசனத்திற்கான ஒரு போட்டியாளராக பார்க்கப்பட்டார்.
சவூதி அரேபிய அரசில் அப்துல்லா குடும்பத்தின் கடைசி உறுப்பினராக, அதிக ஆற்றல்கள் உள்ள நிலையில் உள்ளவராக அவர் கருதப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசராக இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் (32) நியமிக்கப்பட்ட பின்னர், நாட்டிலும், அராசங்கத்திலும், சமூக பொருளாதார ரீதியிலும் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு அங்கமாக இக்கைதுகளும் பதவி மாற்றங்களும் நோக்கப்படுகின்றன.
62 வயதான இளவரசர் அல்வலீத் பின் தலால் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்குகிறார்.
அவரின் சொத்து மதிப்பு 1,800 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 276,426 கோடி இலங்கை ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரத்தியேக விமானங்கள், உல்லாசப் படகுகள் போன்றவற்றுக்கு உரிமையாளராக விளங்குவதன் மூலமும் பிரசித்தி பெற்றவர் அவர்.
பரந்தளவிலான இக்கைதுகள் சவூதி அரேபியாவின் நவீன வர லாற்றில் முன்னொருபோதும் இல்லா ததாகும் என அமெரிக்காவின் றைஸ் பல்கலைக்கழக ஆய்வாளரான கிறி ஸ்டியன் உல்ரிச்சென் தெரிவித் துள்ளார்.