இலங்கை டெஸ்ட் குழாமில் குசல் மெண்டிஸ் இல்லை; தனஞ்செய டி சில்வா மீள அழைக்கப்பட்டுள்ளார்

(நெவில் அன்­தனி)

இந்­தி­யா­வுக்­கான கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்ள இலங்கை டெஸ்ட் குழாமில் 3ஆம் இலக்க துடுப்­பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அவ­ருக்குப் பதி­லாக குழாமில் தனஞ்­செய டி சில்வா இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலை­மை­ய­கத்தின் கேட்­போர்­கூ­டத்தில் நேற்றுப் பிற்­பகல் நடை­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போது இந்­தி­யா­வுக்­கான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாமை தெரிவுக் குழு உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான காமினி விக்­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யிட்டார்.

குசல் மெண்டிஸ் குழாமில் இணைக்­கப்­ப­டாதது குறித்து அவ­ரிடம் வின­வி­ய­போது, ‘‘பாகிஸ்­தா­னு­ட­னான டெஸ்ட் தொட­ரின்­போது அவர் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்கத் தவ­றினார்.

அத்­துடன் அவ­ரது துடுப்­பாட்­டத்தில் நிலவும் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­வ­தற்­கென அவ­ருக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் துடுப்­பாட்­டத்தில் சரி­வு­கண்­டுள்ள அவர், மேலும் நெருக்­க­டிக்­குள்­ளா­வதைத் தவிர்க்கும் வகையில் இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது’’ என பதி­ல­ளித்தார்.

இலங்கை 2 – 0 என கைப்­பற்­றிய பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் உபாதை கார­ண­மாக ஓரங்­கட்­டிய லஹிரு திரி­மான்ன மீண்டும் குழாமில் இணைத்­துக்­ கொள்­ளப்­பட்­டுள்ளார்.

அவர் திமுத் கரு­ணா­ரட்­ன­வுடன் ஆரம்ப ஜோடி­யாக விளை­யா­டுவார் எனப் பெரிதும் நம்­பப்­ப­டு­கின்­றது. அணி யின் தலை­வ­ராக தினேஷ் சந்­திமால் தொடர்ந்தும் செயற்­ப­ட­வுள்ளார்.

உபாதை கார­ண­மாக பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் இடம்­பெ­றா­ம­லி­ருந்த முன்னாள் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் இலங்கை குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

இது­வரை டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­ராத இளம் வீர­ரான ரோஷேன் சில்வா டெஸ்ட் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க, அண்­மைக்­கா­ல­மாக அடிக்­கடி உபா­தைக்­குள்­ளான வீரர்கள் அனை­வரும் மீண்டும் பூரண உடற்­த­கு­தியை நிரூ­பித்­துள்­ள­தா­கவும் இது திருப்தி தரு­வ­தா­கவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

இலங்கை குழாம்

தினேஷ் சந்­திமால் (அணித் தலைவர்), திமுத் கரு­ணா­ரட்ன, தனஞ்­செய டி சில்வா, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், லஹிரு திரிமான்ன, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், டில்ருவன் பேரேரா, லஹிரு கமகே, லக் ஷான் சந்தகேன், விஷ்வா பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, நிரோஷன் திக்வெல்ல, ரொஷேன் சில்வா.

(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)

(Visited 70 times, 1 visits today)

Post Author: metro