ஒரே நாளில் இரு தடவை லொத்தர் பரிசுகளை வென்ற பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே நாளில் இரு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசுகளை வென்றுள்ளார்.

வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த கிம்பர்லி மொரிஸ் எனும் இப்பெண்ணே இந்த மாபெரும் அதிஷ்டசாலி ஆவார்.

கடந்த திங்கட்கிழமை அவருக்கு டயமன்ட் டேஸ்லர் எனும் சுரண்டல் லொத்தர் சீட்டில் 10,000 டொலர் (சுமார் 15.3 லட்சம் ரூபா) பரிசு கிடைத்தது, அப்பரிசுப் பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும்போது மற்றொரு லொத்தர் சீட்டையும் கிம்பர்லி மொரிஸ் வாங்கினார்.

அந்த சீட்டில் அவருக்கு 10 லட்சம் டொலர் (சுமார் 15.3 கோடி ரூபா) பரிசு கிடைத்தது.

20 டொலர் பெறுமதியான மேற்படி லொத்தர் சீட்டுகளில் ஒரே நாளில் 10 லட்சம் டொலரையும் 10,000 டொலரையும் பரிசுகளாக வென்ற முதல் நபர் கிம்பர்லி மொரிஸ் ஆவார்.

(Visited 174 times, 1 visits today)

Post Author: metro