இலங்கையின் புதிய துடுப்பாட்டப் பயிற்றுநர் திலான் சமரவீர; புதிய தலைமைப் பயிற்றுநர் ஜனவரியில் நியமிக்கப்படுவார்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்டப் பயிற்­று­ந­ராக முன்னாள் டெஸ்ட் துடுப்­பாட்ட வீரர் திலான் சம­ர­வீர நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இங்­கி­லாந்தில் 2019 இல் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­வரை இலங்கை அணியின் பயிற்று­ந­ராக திலான் சம­ர­வீர ஒப்­பந்தம் செய்­யப்­ப­டுவார் என்­பதை கிரிக்கெட் தலை­மையக கேட்­போர்­கூ­டத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால உறு­தி­செய்தார்.

அத்­துடன் இந்­திய கிரிக்கெட் விஜ­யத்தின் பின்னர் புதிய தலைமைப் பயிற்­றுநர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டுவார் எனவும் தலைமைப் பயிற்­று­ந­ருக்­கான குறும்­பட்­டி­யலில் மூன்று வெளி­நாட்­ட­வர்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் அவர் கூறினார்.

இதே­வேளை அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்­பர்­னி­லி­ருந்து இன்று இரவு நாடு திரும்பும் திலான் சம­ர­வீ­ர­வுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் மூன்று வருட ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது.

இதனைத் தொடர்ந்து மூன்று டெஸ்ட்கள், மூன்று சர்­வ­தேச ஒருநாள் போட்­டிகள், மூன்று சர்­வ­தேச இரு­பது 20 போட்­டிகள் ஆகி­ய­வற்றில் விளை­யா­டும்­பொ­ருட்டு நாளைய தினம் இந்­தியா செல்லும் அணி­யுடன் திலான் சம­ர­வீர இணை­ய­வுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லியா, பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி­களின் துடுப்­பாட்ட ஆலோ­ச­க­ராக இதற்கு முன்னர் பத­வி­வ­கித்­துள்ள திலான் சம­ர­வீர, உத்­தி­யோ­க­பூர்வ துடுப்­பாட்டப் பயிற்­று­ந­ராக பதவி ஏற்­க­வுள்­ளமை இதுவே முதல் தட­வை­யாகும்.

இந்­திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதம் இலங்­கைக்கு வருகை தந்­த­போது தற்­கா­லிக துடுப்­பாட்டப் பயிற்­று­ந­ராக இலங்கை அணி­யுடன் இணைந்த ஹஷான் திலக்­க­ரட்ன மீண்டும் இலங்கை கிரிக்கெட் அபி­வி­ருத்தி குழாம்­களின் துடுப்­பாட்டப் பயிற்­றுநர் பத­வியை தொட­ர­வுள்ளார்.

இலங்­கையின் அதி சிறந்த மத்­திய வரிசை துடுப்­பாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான திலான் சம­ர­வீர, 81 டெஸ்ட் போட்­டி­களில் 14 சதங்கள், 30 அரைச் சதங்­க­ளுடன் 5,462 ஓட்­டங்­களைக் குவித்­துள்ளார். வல­துகை சுழல்­பந்­து­வீச்­சா­ள­ரான திலான் சம­ர­வீர பகு­தி­நேர பந்­து­வீச்­சா­ள­ராக 15 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார்.

53 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் விளை­யா­டி­யுள்ள இவர், 2 சதங்­க­ளுடன் 862 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார்.
இது இவ்­வா­றி­ருக்க, ஹஷான் திலக்­க­ரட்ன, அவிஷ்க குண­வர்­தன, ஹேமன்த தேவப்ரிய, ஓஷாடி வீரசிங்க ஆகியோர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் விளையாட்டுத்துறை நகரில் ஐ.சி.சி பயிற்சியகத்தில் நிலை 3 பயிற்சி செயலமர்வில் பங்குபற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்தது.

(Visited 46 times, 1 visits today)

Post Author: metro