கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற தனியார் பஸ் மதுரங்குளியில் விபத்து: எழுவர் பலி, 42 பேருக்கு காயம் ; பாலத்தின் பாதுகாப்பு அரண்களை தகர்த்துக் கொண்டு புரண்ட பஸ்

(எம்.எப்.எம்.பஸீர், மது­ரங்­குளி நிருபர், முஹம்மட் ரிபாக்)

புத்­தளம் முந்தல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மது­ரங்­கு­ளியின் பத்தாம் கட்டை பகு­தியில் நேற்றுக் காலை இடம்­பெற்ற விபத்தில் 7 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன், 42 பேர் காய­ம­டைந்து புத்­தளம், முந்தல், சிலாபம் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்­றுக்­காலை 8.15 மணி­ய­ளவில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.

கொழும்­பி­லி­ருந்து யாழ் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ­ஒன்று முச்­சக்­கர வண்டி ஒன்­றினை முந்திச் செல்ல முற்­பட்­ட­போது இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இதன் போது 49 பேர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் புத்­தளம், முந்தல், சிலாபம் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் அவர்­களில் 3 பெண்கள் உட்பட 7 பேர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

காய­ம­டைந்த 27 பேர் புத்­தளம் வைத்­தி­ய­சா­லை­யிலும், 7பேர் சிலாபம் வைத்­தி­ய­சா­லை­யிலும் மேலும் 8 பேர் முந்தல் வைத்­தி­ய­சா­லை­யிலும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

பஸ் வண்­டியின் சாரதி விபத்து தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவரும் விபத்தில் காய­ம­டைந்­துள்­ளதால் பொலிஸ் பாது­காப்பின் கீழ் புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.


பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ள ஆரம்­பக்­கட்ட விசா­ணை­களில் மித­மிஞ்­சிய வேகம், அபா­ய­க­ர­மாக வாகனம் செலுத்தல் ஆகி­யன விபத்­துக்­கான பிர­தான கார­ண­மாக சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொழும்பு புறக்­கோட்­டை­யி­லி­ருந்து யாழ் நோக்கி பய­ணத்தை ஆரம்­பித்­துள்ள குறித்த தனியார் பஸ் முந்தல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பத்தாம் கட்­டை­யூ­டாக பய­ணிக்கும் போதே அந்த பஸ் வண்­டியின் முன்னால் பச்சை நிற முச்­சக்­கர வண்­டி­யொன்று பய­ணித்­துள்­ளது.

இதன் போது அந்த முச்­சக்­கர வண்­டியை முந்­திச்­செல்ல பஸ் சாரதி முற்­பட்­டுள்ளார். ‍எனினும் மித­மிஞ்­சிய வேகம் கார­ண­மாக கட்­டுப்­பாட்டை இழந்­துள்ள பஸ் வண்டி முச்­சக்­கர வண்­டியில் ஒரு பக்­கத்தை மோதிய வண்ணம் அரு­கி­லி­ருந்த ஓடைக்கு மேலால் கட்­டப்­பட்­டி­ருந்த பாலத்தின் பாது­காப்பு அரண்­களை தகர்த்துக் கொண்டு விபத்தை ஏற்­ப­டுத்­திய வண்ணம் புரண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போதே 49 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர். அவர்­களில் 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் புத்­தளம் பிரதி பொலிஸ்மா அதிபர் சம்­பிக்க சிறி­வர்­த­னவின் உத்­த­ர­வுக்­க­மைய முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விசேட விசா­ர­ணை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

(Visited 141 times, 1 visits today)

Post Author: metro