அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 26 பேர் பலி! 20 பேர் காயம்

அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாநி­லத்­தி­லுள்ள பெப்டிஸ்ட் தேவா­ல­யத்தில் நேற்று முன்­தினம் நபர் ஒருவர் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் குறைந்­தது 26 பேர் கொல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.


டெக்சாஸ் மாநி­லத்தின் சதர்லேண்ட் ஸ்பிரிங் நகர வில்சன் பகு­தி­யி­லுள்ள பெப்டிஸ்ட் தேவா­ல­யத்தில் ஞாயிற்­றுக்­
கி­ழமை (நேற்று முன்­தினம்) பூஜை நடந்­து­கொண்­டி­ருந்­த­போதே இந்தத் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது. இதில் 20 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

துப்­பாக்கிச் சூட்டின் பின்னர் சம்­பவ இடத்­தி­லி­ருந்து சில மைல்கள் தொலைவில் சந்­தேக நபர் அவ­ரது வாக­னத்தில் உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளார்.


சந்­தேக நபர் இள­மை­யான தோற்­ற­மு­டைய வெள்ளை நிறத்­தவர் எனவும் அவர் 26 வய­தான டேவின் பெட்ரிக் கெல்லி என பொலிஸார் அடை­யாளம் கண்­டி­ருப்­ப­தா­கவும் அமெ­ரிக்க ஊடகம் ஒன்று தெரி­வித்­துள்­ளது.

கெல்லி தனது மனைவி மற்றும் குழந்­தையைத் தாக்­கி­ய­மைக்­காக நீதி­மன்­றத்தின் தற்­காப்பு நட­வ­டிக்­கையைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அமெ­ரிக்க விமா­னப்­படை மூலம் நீக்கம் செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஆனால், தேவா­லயத் தாக்­கு­த­லுக்­கான காரணம் தெளி­வாகத் தெரி­ய­வில்லை எனக் கூறப்­ப­டு­கின்­றது. கறுப்பு நிற ஆடை­யையும் குண்டு துளைக்­காத மார்புக் கவ­சத்­தையும் அணிந்­தி­ருந்த துப்­பாக்­கி­தாரி இயந்­திரத் துப்­பாக்­கியால் தேவா­ல­யத்தின் வெளி­யேயும் பின்னர் உள்ளேயும் சென்று துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­ய­தாக டெக்சாஸ் மாநி­லத்தின் பொதுப் பாது­காப்பு பிராந்­தியத் திணைக்­களப் பணிப்­பாளர் பிறீமேன் மார்டின் தெரி­வித்­துள்ளார்.

தேவா­ல­யத்­துக்குள் நுழைந்த துப்­பாக்­கி­தா­ரியை, அங்­கி­ருந்த உள்­ளூர்­வாசி ஒருவர் தனது சொந்தத் துப்பாக்­கியால் சுட்­ட­தை­ய­டுத்து சந்­தே­க­நபர் ஆயு­தத்தைக் கீழே­போட்­டு­விட்டு வாக­னத்தை நோக்கி ஓடி­யுள்ளார்.

உள்­ளூர்­வாசி துப்­பாக்­கி­தா­ரியைப் பின் ­தொ­டர்ந்து சென்­ற­நி­லையில், துப்­பாக்­கி­தா­ரியின் வாகனம் விபத்­துக்­குள்­ளா­கி­யது. பின்னர் துப்­பாக்­கி­தாரி உயி­ரி­ழந்த நிலையில் அவ­ரது வாக­னத்­தி­லி­ருந்து பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளார். இவர் தன்னைத் தானே சுட்­டுக்­கொண்டு உயி­ரி­ழந்­தாரா அல்­லது அவரை துரத்திச் சென்­றவர் துப்­பாக்­கியால் சுட்­டதில் உயி­ரி­ழந்­தாரா என்­பது தெரி­ய­வில்லை.

துப்­பாக்­கி­தா­ரியின் வாக­னத்­தி­லி­ருந்து பல ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. டெக்சாஸ் மாநில வர­லாற்றில் இது­வொரு ‘பயங்­க­ர­மான தாக்­குதல்’ என அம் மாநில ஆளுநர் கிறேக் அப்போட் தெரி­வித்­துள்ளார்.

இதில் விசேட தேவை­யுள்ள தனது மக­ளான அன­பெல்லும் (14 ) கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பெப்டிஸ்ட் தேவா­ல­யத்தின் பிர­தான மத­குரு பிரான்க் பொமெரோய் ஏ.பி.சி. செய்தி நிறு­வ­னத்­துக்குத் தெரி­வித்­துள்ளார். சுமார் 400 பேர் வசிக்­கின்ற சதர்லேண்ட் ஸ்பிரிங் சிறியதொரு நக­ர­மாகும்.

துப்­பாக்­கி­தாரி மோச­மான ஒரு தனி­நபர் என தெரி­வித்­துள்ள ஆசிய நாடு­க­ளுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், எமது நாட்டில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாக உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் 58 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாத காலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 19 times, 1 visits today)

Post Author: metro