சைட்டம் தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு குழு – உண்ணாவிரதப் போராட்டங்களைக் கைவிடுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள்

(எம்.எம்.மின்ஹாஜ்)

சைட்டம் மாலபே மருத்­துவக் கல்­லூரி தொடர்­பாக அர­சாங்­க­த்­தினால் முன்­வைக்­கப்­பட்ட தீர்வுத் திட்­டத்தில் காணப்­படும் முரண்­பா­டு­களை இனங்­கண்டு பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் தீர்ப்­ப­தற்கு பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்­வாவின் தலை­மையில் அனைத்து தரப்­பு­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை கொண்ட ஒன்­றி­ணைந்த புதிய குழு­வொன்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று நிய­மித்­துள்ளார்.

அத்­துடன் சாகும் வரை உண்­ணா­வி­ரதப் போராட்ட முயற்­சி­களை கைவிட்டு அரச பல்­க­லை­க்க­ழக மாண­வர்­களின் பெற்­றோர்கள் குறித்த பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு பூரண ஒத்­து­ழைப்பை அர­சாங்­கத்­திற்கு வழங்க வேண்டும் என ஜனா­தி­பதி வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் ஜனா­தி­ப­தியின் ஊட­கப்­பி­ரிவு நேற்று வெளி­யிட்ட ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மாலபே சைட்டம் மருத்­துவ கல்­லூரி தொடர்­பான பிரச்­சி­னையை தீர்க்க தேசிய கொள்கை மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இதன்­படி அந்த குழு­வினால் குறித்த பிரச்­சி­னைக்­கான தீர்வுத் திட்­ட­மொன்று முன்­வைக்­கப்­பட்­டது.

இதன்­பி­ர­காரம் பல்­க­லை­க்க­ழக பேரா­சி­ரி­யர்கள், மாண­வர்­களின் பெற்­றோர்கள், வைத்­திய சங்­கத்­தினர் அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்றும் இது தொடர்பில் தொடர்ந்து அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் எனவும் பலர் யோ சனை முன்­வைத்­துள்­ளனர்.

இந்­நி­லையில், சைட்டம் தொடர்­பாக ஏற்­க­னவே அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்ட தீர்வுத் திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­ப­டாத முரண்­பா­டான பிரச்­சி­னை­களை ஆராய்ந்து உரிய தீர்வைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் அனைத்து தரப்­பு­களின் ஒன்­றி­ணைந்த புதிய குழு­வொன்­றினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று நிய­மித்தார்.

இதன்­படி தேசியக் கொள்கை மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா தலை­மை­யி­லேயே புதிய குழுவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த குழுவில் சுகா­தார, போசனை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சின் செய­லாளர் ஜனக சுக­த­தாஸ, உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சாலை அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் டி.சி. திஸா­நா­யக்க, பல்­க­லை­க்க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பேரா­சி­ரியர் மொஹான் டி சில்வா, இலங்கை மருத்­துவ சபை தலைவர் பேரா­சி­ரியர் கொல்வின் குண­ரத்ன, கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர் பேரா­சி­ரியர் ல­க் ஷ்மன் திஸா­நா­யக்க, ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லை­க்க­ழ­கத்தின் உப­வேந்தர் பேரா­சி­ரியர் சம்பத் அம­ர­துங்க, கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பீடா­தி­பதி பேரா­சி­ரியர் ஜெனிபர் பெரேரா, களனி பல்­க­லை­க்க­ழ­கத்தின் பீடா­தி­பதி பேராசிரியர் திலன்தி டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பாக ஒருவரும், மருத்து பீட பேராசிரியர் சங்கம் சார்பாக ஒருவரும், மருத்து பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் சார்பாக ஒருவருமாக மொத்தம் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 37 times, 1 visits today)

Post Author: metro