1944 : அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 4 ஆவது தடவையாக வென்றார்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 07

 

1492 : பிரான்ஸின் அல்சாஸ் பிராந்­தி­யத்தில் விண்­கல்­லொன்று வீழ்ந்­தது. உலகில் பதி­வு­ செய்­யப்­பட்ட மிகப் பழை­மை­யான விண்கல் மோதல் இது­வாகும்.

1502 : ஹொண்­டூராஸ் கரையை கொலம்பஸ் அடைந்தார்.

1665 : இப்­போதும் வெளி­வரும் உலகின் மிகப் பழ­மை­யான பத்­தி­ரி­கை­யான “த லண்டன் கசெட்” முத­லா­வது இதழ் வெளி­யா­னது.

1893 : அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது.

1910 : உலகின் முத­லா­வது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோ­த­ரர்­களால் ஒஹை­யோவில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1917 : அக்­டோபர் புரட்சி; விளா­டிமிர் லெனின் தலை­மையில் கம்­யூ­னிசப் புரட்­சி­யா­ளர்கள் ரஷ்­யாவின் இடைக்­கால அர­சாங்­கத்தைக் கவிழ்த்­தனர். (பழைய ஜூலியன் நாட்­காட்­டியில் இது அக்­டோபர் 25 ஆம் திக­தி­யாகும்).

1917 : முதலாம் உலகப் போர்: பிரித்­தா­னியப் படைகள் ஓட்­டோமான் பேர­ர­சிடம் இருந்து காஸாப் பகு­தியைக் கைப்­பற்­றின.

1918 : மேற்கு சமோ­வாவில் பர­விய ஒரு வித வைரஸ் நோய் கார­ண­மாக 7,542 பேர் ஆண்டு முடி­விற்குள் இறந்­தனர்.

1931 : மாஓ சே துங் சீன சோவியத் குடி­ய­ரசை அக்­டோபர் புரட்­சியின் நினைவு நாளில் அறி­வித்தார்.

1941 : இரண்டாம் உலகப் போர் “ஆர்­மே­னியா” என்ற சோவியத் மருத்­துவக் கப்பல் ஜேர்­ம­னிய விமா­னங்­களின் குண்­டு­வீச்சில் மூழ்­கி­யது. 5,000 பேர் வரையில் இதில் கொல்­லப்­பட்­டனர்.

1941 : நாசி ஜேர்­ம­னியர் உக்­ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்­களைக் கொன்­றனர்.

1944 : அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தொடர்ச்­சி­யாக 4 ஆவது தட­வை­யாக வென்று சாதனை படைத்தார். (பின்னர் இரு தட­வை­க­ளுக்கு மேல் ஒருவர் இப்­ப­த­வியை வகிக்க முடி­யாது என சட்டத் திருத்தம் செய்­யப்­பட்­டது)

1956 : சுயஸ் கால்வாய் பிரச்­சினை; எகிப்தில் இருந்து உட­ன­டி­யாக ஐக்­கிய இராச்­சியம், பிரான்ஸ், இஸ்ரேல் படை­களை வெளி­யே­று­மாறு ஐநா பொதுச் சபைக் கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

1983 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் செனட் கட்­ட­டத்தில் குண்டு வெடித்­தது.

1987 : துனீ­ஷி­யாவில் ஜனா­தி­பதி ஹபிப் போர்­குய்பா, பிர­தமர் பென் அலி­யினால் பதவி கவிழ்க்­கப்­பட்டார்.

1989 : கிழக்கு ஜேர்­ம­னியில் அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் கார­ண­மாக அமைச்­ச­ரவை கலைக்­கப்­பட்­டது.

1990 : அயர்­லாந்தின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாக மேரி ரொபின்சன் தெரி­வானார்.

1991 : அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற கூடைபந்தாட்ட வீர­ரான மெஜிக் ஜோன்சன் தாம் எச்.ஐ.வி. தோற்­றுக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாக அறி­வித்து அமெ­ரிக்க தேசிய கூடைப்­பந்­தாட்டச் சங்­கத்­தி­லி­ருந்து (என்.பி.ஏ.) வெளி­யே­றினார்.

1996 : செவ்வாய் கிர­கத்­துக்­கான “மார்ஸ் குளோபல் சர்­வேயர்” விண்­க­லத்தை நாஸா ஏவி­யது.

1996 : நைஜீ­ரிய விமா­ன­மொன்று லாகோஸ் அருகே வீழ்ந்­ததில் 143 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000 : அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்­றது. இத் தேர்தல் பெறு­பேறு தொடர்பில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், அல் கோர் ஆகி­யோ­ருக்கு இடையில் ஏற்­பட்ட சர்ச்சை உயர்­நீ­தி­மன்­றத்தின் மூலம் பின்னர் தீர்க்­கப்­பட்­டது.

2000 : ஹிலாரி கிளின்டன் நியூயோர்க் செனட்டர் பத­விக்­கான தேர்­தலில் வென்றார். அமெ­ரிக்க முதற்­பெண்­ம­ணி­யாக விளங்­கிய ஒருவர் அந்­நாட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வா­னமை இதுவே முதல் தட­வை­யாகும்.

2002 : அமெ­ரிக்கப் பொருட்­களின் விளம்­ப­ரங்­களை அறி­விப்­ப­தற்கு ஈரான் தடை விதித்­தது.

2004 : ஈராக்கில் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கோட்­டை­யான பலு­ஜாவில் அமெ­ரிக்கப் படைகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்ததையடுத்து ஈராக்கிய இடைக்கால அரசாங்கம் 60 நாள் அவசர பிரகடனம் செய்தது.

2007 : பின்­லாந்தில் பாட­சா­லை­யொன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் 9 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2012 : குவாத்தமாலாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 52 பேர் உயிரிழந்தனர்.

(Visited 23 times, 1 visits today)

Post Author: metro