தெரிவாளர்கள் விரும்பினால் 16ஆவது வீரராக அசேலவை இந்தியாவுக்கு அனுப்பத் தயார் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால

(நெவில் அன்­தனி)

தெரிவுக் குழு­வினர் விரும்­பினால் அசேல குண­ரத்­னவை 16ஆவது வீர­ராக இந்­தி­யா­வுக்கு அனுப்­பி­வைக்கத் தயா­ராக இருப்­ப­தாக ஞாயி­றன்று நடை­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

இந்­தி­யா­வுக்­கான கிரிக்கெட் விஜ­யத்தில் இலங்கை குழாமில் குசல் மெண்டிஸ் இடம்­பெ­றா­த­தற்­கான கார­ணத்தை விளக்­கி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

‘‘ஒரு வரு­டத்­திற்குப் பின்னர் குழாத்தில் இடம்­பெறும் வீரர்கள் அனை­வரும் உடற்­த­குதி பரீட்­சையில் தேர்­வா­கி­யுள்­ளனர். எமது ஒப்­பந்­தத்தில் இடம்­பெறும் ஒரு வீர­ரேனும் உபா­தையை எதிர்­கொள்­ள­வில்லை. அசேல குணர்­த­னவும் உடற்­த­கு­தியை நிரூ­பித்­துள்ளார்.

 

ஆனால் அவர் போட்­டி­களில் ஈடு­ப­ட­வில்லை. தெரிவுக் குழுவின் கோரிக்­கைக்கு அமைய அடுத்த பத்து தினங்­க­ளுக்குள் அசே­லவை போட்­டி­களில் பங்­கு­பற்றச் செய்­ய­வுள்ளோம்.

 

அது வெற்றி அளித்தால், தெரிவுக் குழு­வினர் கோரிக்கை விடுத்தால் அசேல குண­ரத்­னவை 16ஆவது வீர­ராக குழாத்தில் இணைப்­பது குறித்தே ஆலோ­சிக்கத் தயார்”” என திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

இதே­வேளை, குசல் மெண்டிஸ் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்கத் தவ­றி­ய­மை­யி­னாலும், அவ­ரது துடுப்­பாட்­டத்தில் நிலவும் தொழில்­நுட்ப குறைப்­பா­டு­க­ளுமே அவரை குழாத்தில் இணைக்­கா­த­தற்கு காரணம் என தெரி­வுக்­குழு உறுப்­பினர் காபினி விக்­ர­ம­சிங்க கூறினார்.

இந்­தியா போன்ற பலம்­வாய்ந்த, தரப்­ப­டுத்­தலில் முதல் நிலை அணி­யுடன் விளை­யாடி குசல் மெண்டிஸ் மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்டால் அவர் அதி­லி­ருந்து மீள்­வது மிகவும் கடி­ன­மாகும்.

 

என­வேதான் அவ­ரது தொழில்­நுட்ப குறை­பா­டு­களை நிவர்த்தி செய்து திற­மையை வெளிப்­ப­டுத்­தினால் அதன் பின்னர் அவருக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்ததாக தெரிவுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான காமினி விக்ரமசிங்க தெரிவித்தார்.

(Visited 78 times, 1 visits today)

Post Author: metro