7 மாகாணங்களில் சிங்கள மொழியும் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழிகளாக்கப்படும் – புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இரா.சம்பந்தன்

(சேனையூர் நிருபர்)

பிரிக்க முடி­யாத நாடாக புதிய அர­சியல் யாப்பு ஒன்றை உரு­வாக்கி வரு­கிறோம். இத­ன­டிப்­ப­டையில் அனைத்து மக்­களும் ஒற்­று­மை­யு­டனும் சமத்­து­வத்­து­டனும் வாழ முடியும். உத்­தி­யோ­க­பூர்வ மொழி­க­ளாக சிங்­க­ளமும் தமிழும் காணப்­படும். அத­ன­டிப்­ப­டையில் 7 மாகா­ணங்­களில் சிங்­கள மொழியும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ்மொழியும் உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யாக பயன்­ப­டுத்­தப்­படும் விதத்தில் அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­க்கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.


திரு­கோ­ண­மலை மாவட்ட அபி­வி­ருத்திக் குழு கூட்­டத்தில் நேற்று கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து உரை­யாற்­று­கையில், நாம் தற்­போது 2017இன் இறு­தி­யிலும் 2018 பிறக்­கவும் உள்ள காலப்­ப­கு­தி­யிலும் உள்ளோம்.
எதிர்­வரும் நாட்­களில் பல தேர்­தல்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் ஒற்­று­மை­யா­கவும் நிதா­ன­மா­கவும் செயற்­பட வேண்டும்.

பிர­தேச சபை­களில் மக்­களின் இன விகி­தா­சா­ரங்­களின் அடிப்­ப­டையில் உத்­தி­யோகபூர்­வ­மொ­ழி­களை பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும். அரச அலு­வ­ல­கங்­க­ளி­லி­ருந்து அனுப்­பப்­ப­டு­கின்ற கடி­தங்கள் யாருக்கு அனுப்­பப்­ப­டு­கி­றதோ அவர்­களின் மொழியில் அமைந்­தி­ருக்க வேண்டும்.

அரச உத்­தி­யோ­கங்­களில் தமிழ் மக்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றனர். இனி இந்த நிலை திருத்­தப்­பட வேண்டும். இவ்­வா­றான விட­யங்கள் மக்­களின் சமத்­து­வத்தை பாதிக்கும். எனவே அர­சாங்க அதி­கா­ரி­களும் இவ்­வி­ட­யத்தில் சமத்­து­வத்­துடன், நடந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro