உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம்

உலக நாயகன்  நடிகர் கமல்­ஹா­ச­னுக்கு இன்று 63 ஆவது பிறந்த தினமாகும்.

1959 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்­ணம்மா’ படத்தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாகத் தொடங்­கிய அவ­ரது சினிமா பயணம் 57 ஆண்­டு­களைத் தாண்டி தொடர்­கி­றது.

 1975 ஆம் ஆண்டில் ‘பட்டாம் பூச்சி’ படத்தில் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மாகி அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, 16 வய­தி­னிலே, வறு­மையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோ­த­ரர்கள், இந்­தியன், ஹேராம், அவ்வை சண்­முகி, தேவர் மகன், விரு­மாண்டி, 10 வேடங்­களில் வந்து திரை­யு­லகை திரும்பிப் பார்க்­க­வைத்த தசா­வ­தாராம் என 220 க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்து ஒவ்­வொரு படத்­திலும் தனி முத்­திரை பதித்­தி­ருக்­கிறார்.

தெலுங்கு, கன்­னடம், வங்­காளம், இந்தி திரைப்­ப­டங்­க­ளிலும் நடித்­துள்ளார். உலக நாய­க­னாக விளங்கும் கமல்­ஹாசன் பிண்­ணனி பாடகர், இயக்­குநர், தயா­ரிப்­பாளர் அவ­தா­ரங்­க­ளையும் எடுத்­துள்ளார்.

திரை­யு­லக சாத­னை­க­ளுக்­காக பத்­மஸ்ரீ, பத்ம பூஷண் விரு­து­களை பெற்றார். சிறந்த நடி­க­ருக்­கான தேசிய விரு­து­க­ளையும் பல தடவை வாங்கி இருக்­கிறார்.

18 பிலிம்பேர் விரு­துகள், டாக்டர் ­பட்டம், பிரான்ஸ் நாட்டின் உய­ரிய விரு­தான செவா­லியர் விரு­தையும் பெற்­றுள்ளார்.

விரைவில் அர­சி­யலில் குதிக்க முடி­வெ­டுத்­துள்ள கமல் அதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­வ­தோடு அடுத்து இயக்­குநர் சங்கர் இயக்­கத்தில் ‘இந்­தியன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்று பிறந்தநாளை முன்னிட்டு ‘விஷ்வரூபம் 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

(Visited 56 times, 1 visits today)

Post Author: metro