கடல் கொந்தளிப்பினால் எரிபொருள் கப்பல் தாமதமாகின்றதா அல்லது வேறு காரணங்களா? தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படாததன் பின்னணியை மக்கள் அறிய வேண்டும் – சம்பிக்க ரணவக்க

(லியோ நிரோஷ தர்ஷன்)

இயற்­கை­யா­கவே கடல் கொந்­த­ளிப்பு ஏற்­பட்டு கப்பல் தாம­த­மா­கின்­றதா அல்­லது வேறு கார­ணங்கள் உள்­ளதா? என கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க , தரம் குறை­வான எரி­பொ­ருளை கொண்டு வந்த இந்­திய நிறு­வ­னத்தின் கப்பல் திருப்பி அனுப்­பப்­பட்ட நிலையில் போதி­ய­ளவு கால அவ­கா­ச­மி­ருந்தும் தட்­டுப்­பாட்டை தவிர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாத தன் பின்­ன­ணியை நாட்டு மக்கள் அறிய வேண்டும் என தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்­லையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் சம்­பிக்க ரண­வக மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், தற்­போது ஏற்­பட்­டுள்ள எரிப்­பொருள் தட்­டுப்­பாடு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் அதனை தெளி­வு ப­டுத்­துவார். ஆனால் இதன் பிண்­ணனி என்ன? என்­பது எனக்கு தெரியும். தரம் குறை­வான எரிப்­பொருள் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு பின்னர் அவற்றை திருப்பி அனுப்­பு­வது மற்றும் எரி­ப்பொ­ரு­ளுக்கு தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­வது என பல்­வேறு பிரச்­சி­னைகள் நாட்டில் இதற்கு முன்­னரும் இடம்­பெற்­றுள்­ளன.

நாட்டில் ஒரு நாளுக்­கான பெற்றோல் தேவை 2500 தொன்­க­ளாகும். எமது சுத்­தி­க­ரிப்பு ஒரு நாளுக்கு 550 டொன் வரையில் காணப்­ப­டு­கின்­றது. கொலன்­னாவ மற்றும் முத்­த­ரா­ஜ­வ­லயில் பெற்றோல் களஞ்­சிய அளவு 2015 ஆம் ஆண்டில் 60 ஆயிரம் வரை காணப்­பட்­டது. 100 நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் இந்த எண்­ணிக்­கையை 90 ஆயிரம் வரை அதி­க­ரித்தேன். எனவே மிக எளி­தாக 85 ஆயிரம் டொன் பெற்­றோலை களஞ்­சி­யப்­ப­டுத்த முடியும்.

இத­ன­டிப்­ப­டையில் 2000 தொன் அளவில் மதிப்­பீடு செய்தால் 45 நாட­்க­ளுக்கு போது­மான பெற்­றோலை களஞ்­சி­யப்­ப­டுத்த முடியும். எரிப்­பொருள் கப்பல் வரும் போது மீண்டும் களஞ்­சி­யப்­ப­டுத்த கூடிய வகையில் சுழற்சி முறை காணப்­படும்.

இந்­திய எரிப்­பொருள் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான எரிப்­பொருள் கப்பல் அக்­டோபர் மாதம் 15 ஆம் திகதி வந்­தது. குறித்த கப்­பலில் கொண்டு வரப்­பட்ட எரிப்­பொருள் உரிய தரத்தில் இல்லை என்­பதை அக்­டோபர் மாதம் 17 ஆம் திகதி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த சம்­பவம் இடம்­பெற்று 20 நாட்­களை கடந்த போதிலும் தேவை­யான எரிப்­பொருள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், நவம்பர் மாதம் முதலாம் திகதி எமது சுத்­தி­க­ரிப்பு பணி­களும் நிறுத்­தப்­பட்­டன. இதனால் சுத்­தி­க­ரிப்பில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட 550 தொன் பெற்­றோலும் கிடைக்­காமல் போனது. மறு­புறம் 3 ஆம் திகதி வர­வி­ருந்த கப்­பலும் 9 ஆம் திக­தியே வரு­கின்­றது. உரிய தின­மான 3 ஆம் திகதி கப்பல் வந்­தி­ருந்தால் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. எனவே இயற்­கை­யா­கவே கடல் கொந்­த­ளிப்பு ஏற்­பட்டு கப்பல் தாம­த­மா­கின்­றதா அல்­லது வேறு கார­ணங்கள் உள்­ளதா ? என்­பதை சிந்­தித்து பாருங்கள். 45 மணித்­தி­யா­ல­யத்தில் எரி­பொருள் கப்பல் ஒன்­றுக்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்க முடியும். நான்கு நாட்­க­ளுக்குள் எரி­பொ­ருளை எவ்­வாறு பெற்­றுக்­கொள்­வது என்­பது முன்னாள் சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் என்ற வகையில் எனக்கு தெரியும்.

எனவே எரி­பொருள் மற்றும் மின்­சார துறை­யிலும் காணப்­படும் இவ்வாறான விளையாட்டுக்களை ஆராய்ந்து புத்தகம் ஒன்று வெளியிட்டேன். தற்போதைய தட்டுப்பாடு எதற்கு என்பதற்கு அந்த புத்தகத்தில் பதில் உள்ளது. இவ்வாறான விளையாட்டுகளை தோல்வியடைய செய்வதற்காக கடுமையாக போராடினோம். அமைச்சு பதவிகளையும் விட்டுச்சென்றோம் என தெரிவித்தார்.

(Visited 56 times, 1 visits today)

Post Author: metro