2013 : பிலிப்பைன்ஸ் சூறா­வ­ளி­யினால் 6,340 பேர் பலி!

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 08

 

1520 : டென்மார்க் படைகள் சுவீ­டனை முற்­று­கை­யிட்­டன. இதை­ய­டுத்து சுமார் 100 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1811 : இலங்­கையில் புதிய நீதி­மன்ற சட்டம் இயற்­றப்­பட்­டது.

1895 : எதிர்மின் கதிர்­களைச் சோத­னை­யிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்­களைக் கண்­டு­பி­டித்தார்.

1917 : ரஷ்­யாவில் அக்­டோபர் புரட்­சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகி­யோ­ருக்கு முழு அதி­கா­ரமும் வழங்­கப்­பட்­டன.

1923 : மியூனிச் நகரில் ஹிட்லர் தலை­மை­யி­லான நாஸிகள் ஜேர்­ம னிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்­வியில் முடிந்­தது.

1938 : பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஜேர்­ம­னிய தூதுவர் கொலை செய்­யப்­பட்­டதை அடுத்து ஜேர்­ம­னி­யிலும் ஆஸ்­தி­ரி­யா­விலும் யூதர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கிளம்­பின.

1939 : மியூனிச் நகரில் ஹிட்­லரைக் கொலை செய்ய எடுக்­கப்­பட்ட முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.

1942 : மேற்கு உக்­ரேனின் தெர்­னோப்பில் நகரில் நாசி ஜேர்­ம­னி­யினர் 2,400 யூதர்­களை பெல்செக் நகரில் இருந்த வதை முகா­முக்கு அனுப்­பினர்.

1950 : கொரியப் போரில் ஐக்­கிய அமெ­ரிக்க வான் படை­யினர். வட கொரிய மிக் விமா­னங்கள் இரண்டை சுட்டு வீழ்த்­தினர்.

1960 : அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ரிச்சர்ட் நிக்­ஸனை தோற்­க­டித்து ஜோன் எவ். கென்­னடி வெற்றி பெற்றார்.

1965 : சாகோஸ் தீவுகள், அல்­டப்ரா, பர்­கு­வாஹர், டெஸ் ரோசஸ் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய பிரித்­தா­னிய இந்து சமுத்­திர மண்­டலம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1977 : கி.மு. முதலாம் நூற்­றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னர் இரண்டாம் பிலிப்பு என்­ப­வரின் சமாதி மனோலிஸ் அண்ட்­ரோனிக்ஸ் என்­ப­வரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

1987 : வடக்கு அயர்­லாந்தில் பிரித்­தா­னிய இரா­ணுவ நினைவு நிகழ்­வொன்றில் குண்டு வெடித்ததில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தி­னரின் 12 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2002 : ஈராக்­கிய ஜனா­தி­பதி சதாம் ஹுஸைன் ஆயு­தங்­களைக் கைவிட வேண்டுமென்பதை வலி­யு­றுத்தும் ஈராக் தொடர்­பான தீர்­மானம் ஐ.நா. பாது­காப்புச் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது.

2006 : வாக­ரையில் எறி­கணை வீச்சுத் தாக்­கு­தலில் 40 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர். 125 இற்கும்
மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.

2006 : பாகிஸ்­தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் 45 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர்.

2011 : விண் கல் ஒன்று பூமியிலிருந்து 324,600 கி.மீ. தூரம் வரை நெருங்கி வந்து பின்பு விலகிச் சென்றது.

2013 : பிலிப்பைன்ஸில் ஹையன் சூறாவளி தாக்கியதால் 6,340 பேர் உயிரிழந்தனர். 1,061 பேர் காணாமல் போயினர்.

(Visited 25 times, 1 visits today)

Post Author: metro