அடுத்த தலைமுறை டென்னிஸ் இறுதிகள் போட்டியின் குலுக்கலில் அழகிகளின் ஆடைகளுக்குள் வீரர்களின் குழுவுக்குரிய எழுத்துகள்: தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கம் மன்னிப்பு கோருகிறது

இத்­தா­லியின் மிலான் நகரில் நடை­பெற்ற, தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்­கத்தின் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­கான இறுதிப் போட்­டியின் (ATP Next Gen Finals) குலுக்கல் வைபவம், பாலு­ணர்வைத் தூண்டும் வகையில் அமைந்­தமை வெட்­கக்­கே­டான செயல் என கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது.

இப் போட்­டியில் பங்­கு­பற்றும் வீரர்­களை குழு­நிலைப் படுத்தும் குலுக்­க­லின்­போது குழுக்­களை நிர்­ண­யிக்கும் எழுத்­துக்கள் (ஏ மற்றும் பி) மொடல் அழ­கி­களின் ஆடை­க­ளுக்குள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் வீரர்களால் எடுக்­கப்­பட்­டன.

இந்­நி­கழ்வில் 8 மொடல் அழ­கிகள் பங்கு­பற்­றினர். வீரர்கள் தாம் இடம்­பெறப் போகும் குழுவை கண்­ட­றி­வ­தற்­காக அங்­குள்ள மொடல் அழ­கி­களில் ஒரு­வரை தெரிவு செய்­யு­மாறு கோரப்­பட்­டனர்.

பின்னர் குறித்த மொடல் அழ­கியின் உடலில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த எழுத்து காண்­பிக்­கப்­பட்­டது. தென் கொரிய வீரர் சுங் ஹியொன், தான் இடம்­பெ­ற­வுள்ள குழுவைக் கண்­ட­றியும் பொருட்டு மொடல் அழ­கியின் கையு­றையை பற்­களால் பற்றி அகற்­று­மாறு கோரப்­பட்டார்.

‘பி’ எழுத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு மொடல் அழகி தனது ஜக்கெட்டைக் கழற்­றி­யுள்ளார். மற்­றொரு மொடல் தனது லேஸ் உடையை உயர்த்தி ஏ எழுத்தை எடுத்து கனே­டிய வீரர் டெனிஸ் ஷப்­போ­வலோவ் அக்­கு­ழுவில் இடம்­பெ­று­வதைக் காட்­டினார்.
இவை அனைத்தும் பாலு­ணர்வைத் தூண்டும் வகை­யி­லான இழி­வான செயல் எனக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

இந்தக் குலுக்கல் முறை­யா­னது மிகவும் வெட்கக் கேடான செயல் என முன்னாள் விம்­பிள்டன் சம்­பியன் அமேலி மொரிஸ்மோ தெரி­வித்­த­துடன் இது பொறுத்­துக்­கொள்­ள­மு­டி­யா­தது என தனது டுவிட்­டரில் ஜூடி மறே குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை, மேற்­படி குலுக்கல் நிகழ்­வா­னது விளை­யாட்டின் மகத்­து­வத்தை இழி­வு­ப­டுத்தி விட்­ட­தா­கவும் குற்றச் செய­லுக்கு ஒப்­பா­ன­தெ­னவும் தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்­கத்­தி­னரும் அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளான ரெட் புல் நிறு­வ­னத்­தி­னரும் தெரி­வித்­துள்­ள­துடன் மன்­னிப்பும் கோரி­யுள்­ளனர்.


”இந்தக் காரியம் நிறை­வேற்­றப்­பட்ட முறை­யா­னது கசப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­துடன் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒன்­றல்ல. இவ்­வை­பத்­தினால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்­காக மன்­னிப்பு கோரு­கிறோம்” என இரு தரப்­பி­னரும் வெளி­யிட்­டுள்ள கூட்டு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

21 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கென சர்­வ­தேச வீரர்கள் சங்­கத்­தினால் முதல் தட­வை­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­கான ஏ.ரி.பி டென்னிஸ் இறு­திகள் மிலான் நகரில் நேற்று ஆரம்­ப­மா­னது.


இப் போட்­டியில் அண்ட்றே ருப்லெவ் (ரஷ்யா), டெனஸ் ஷப்­போ­வலொவ் (கனடா), சுங் ஹியொன் (தென் கொரியா), ஜியாங்குலி குவின்ஸி (இத்தாலி) ஆகியோர் குழு ஏயில் இடம்பெறுகின்றனர்.

கரென் காச்சனொவ் (ரஷ்யா), போனா கோரிக் (குரோஷியா), ஜாரெட் டொனல்ட்சன் (ஐக்கிய அமெரிக்கா), டேனில் மெட்வெடெவ் (ரஷ்யா) ஆகியயோர் குழு பியில் இடம்பெறுகின்றனர்.

(Visited 65 times, 1 visits today)

Post Author: metro