உயிரினங்கள் இருப்பதற்கு சாத்தியமான பூமியைப் போன்ற 7 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு

பூமியின் அள­வு­டைய  7 புதிய கிர­கங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன என அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மான நாசா நேற்­று­முன்­தினம் அறி­வித்­துள்­ளது. இக்­கி­ரங்­களில் உயிரி­னங்கள் இருப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூறுகள் உள்­ள­தா­கவும் நாசா தெரி­வித்­துள்­ளது.

 

7 new-planets TRAPPIST-1
மேற்­படி ஏழு கிர­கங்­களும் எமது பால்­வீ­தியில் எமது சூரிய தொகு­திக்கு வெளியில் உள்ள Trappist-1  ஒரு எனும் நட்­சத்­தி­ரத்தை சுற்றி வரு­கின்­றன எனத் தெர­விக்­கப்­பட்­டுள்­ளது.


இவை பூமியி­லி­ருந்து 40 ஒளி­யாண்­டுகள் தூரத்தில் அமைந்­துள்­ள­தாக நாசா தெரி­வித்­துள்­ளது. (ஒளி­யா­னது ஒரு வரு­டத்தில் பயணம் செய்­யக்­கூ­டிய தூரம் அதாவது சுமார் 9.460,730,472,580 கிலோ­மீற்றர் தூரம் ஒரு ஒளி­யாண்டு என அழைக்­கப்­படும்)


எமது சூரியத் தொகு­தி­யி­லுள்ள கிர­கங்­களை ஆங்­கி­லத்தில் பிளனட் (planet)என அழைப்பர். எமது சூரிய தொகு­திக்கு அப்பால் காணப்­படும் கிர­கங்கள் எக்­ஸோ­பிளனட் (exoplanet)  என அழைக்­கப்­படும்.


புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்டுள்ள மேற்­படி 7 எக்­ஸோ­பி­ளனட் கிர­கங்­களும்  ஒரே நட்­சத்­தி­ரத்தை சுற்றி வரு­வதும் உயி­ரி­னங்கள் வாழக்­கூ­டிய வலயத்தில் அமைந்­தி­ருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.


இது­வரை சுமார் 3,449 எக்­ஸோ­பி­ளனட் கிர­கங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், கிரகங்­களில் உயி­ரி­னங்கள் காணப்­ப­டு­வ­தற்கு நீரா­னது அத்­தி­யாவ­சியமா­ன­தாகும். இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­பட்ட எக்­ஸோ­பி­ளா­னட்­களில் ஒரு­சில கிர­கங்கள் மாத்­தி­ரமே அவை சார்ந்த நட்­சத்­தி­ரத்தின் அள­வுக்­க­திக வெப்­பமும் இல்­லாத, மிக அதிக குளிரும் இல்­லாத வல­யத்தில் அமைந்­துள்­ளன.


புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­டுள்ள 7 கிர­கங்­களில் 3 கிர­கங்கள் உயி­ரி­னங்கள் இருப்­ப­தற்கு சாத்­தி­ய­மான வல­யத்தில் உள்­ளன என விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.

 

TRAPPIST-1-new-planets-NASA

ஒப்பீடு : TRAPPIST-1 நட்சத்திரத்தின் கிரகங்களும் எமது சூரியனின் சில கிரகங்களும்:நாசாவின் விஞ்­ஞானப் பயண பணி­ய­கத்தின் துணை நிர்­வாகிகளில் ஒரு­வரான தோமஸ் ஸர்­புசென் கருத்துத் தெரி­விக்­கையில், உயி­ரி­னங்கள் இருப்­ப­தற்கு உத­வக்­கூ­டிய புதிய சூழல்­களை கண்­ட­றி­வதில் இக்­கண்­டு­பி­டிப்பு முக்­கிய பங்­காற்றும் எனத் தெரி­வித்துள்ளார்.


“(இந்த பிர­பஞ்­சத்தில்) நாம் தனி­யாக இருக்­கி­றோமா என்ற கேள்­விக்கு விஞ்­ஞா­னத்தில் மிக முன்னுரிமை கொண்டது. உயி ரினங்கள் இருக்கக் கூடிய வலயத்தில் அமைந்த  இத்தகைய பல கிரகங்கள் முதல் தடவையாக கண்டுபிடிக்கப் பட்டமையானது, மேற்படி கேள்விக்கு பதில் காணும் இலக்கை அடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 223 times, 1 visits today)

Post Author: metro