யுத்தத்தில் பலியான இராணுவ வீரரின் இருவருட சம்பளத்தை போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்ற சகோதரன் கைது: தாய், தந்தை உயிரிழந்ததனையும் மறைத்தார் எனவும் குற்றச்சாட்டு

(எம். செல்­வ­ராஜா)

யுத்த காலத்தில் கொல்­லப்­பட்ட இரா­ணுவ வீரர் ஒரு­வரின் இரு­வ­ருட சம்­ப­ளத்தை போலி ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்துப் பெற்று மோசடி செய்தார் என்ற சந்­தே­கத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர் ஒரு­வரின் சகோ­த­ரனை மொன­ரா­கலை விசேட குற்­றப்­பு­ல­னாய்வுப் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்­டவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட போது இந்த நபரால் 13 இலட்சம் ரூபா இவ்­வாறு மோசடி செய்­யப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

வெல்ல­வாயப் பகு­தியைச் சேர்ந்த 44 வய­தான நபரே சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­வ­ராவார்.

மேற்­படி இரா­ணுவ வீரர் ஒருவர் கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி, யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற தாக்­குதல் ஒன்றில் பலி­யானார். இதை­ய­டுத்து, அவ­ரது சம்­பளக் கொடுப்­ப­ன­வு­களை, பலி­யான நபரின் தாய் அல்­லது தந்­தைக்கு வழங்க இலங்கை இரா­ணுவம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.

இந்த நிலையில், உயி­ரி­ழந்த படை வீரரின் தந்தை 2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திக­தியும் தாய் 2014 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திக­தியும் மர­ணித்­துள்­ளனர்.

இவர்கள் இரு­வரும் மர­ண­ம­டைந்­த­தனை மறைத்து, பகுதி கிராம சேவை­யாளர் மற்றும் பிர­தேச செய­லாளர் ஆகி­யோரின் போலி இலட்­சினை மற்றும் போலி கையொப்­பங்­க­ளுடன் ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்து, இரு வரு­டங்­க­ளாக உயி­ரி­ழந்த இரா­ணுவ சிப்­பாயின் மாத சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வான பதின்­மூன்று இலட்சம் ரூபா பணத்தை அவ­ரது சகோ­தரன் பெற்று வந்­துள்ளார்.

இது குறித்து, வெல்லவாய பிர­தேச செய­லாளர் ஆர்.எம். தயா­ரட்ன, வெல்லவாய பொலி­ஸா­ருக்கு செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து, மொன­ரா­கலை விசேட குற்­றத்­த­டுப்புப் பொலிஸார், மோசடி செய்த நபரைக் கைது செய்துள்ளனர்.  விசாரணைகளின் பின்னர், இந்நபருக்கெதிராக வழக்கு தொடரப்படுமென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metro