பொப் பாடகியாகும் ஸ்ருதி

சூர்யா, தனுஷ் உள்­ளிட்ட முன்­னணி ஹீரோக்­க­ளுடன் ஜோடி­யாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், கடந்த சில மாதங்­க­ளாக புதிய படங்கள் ஒப்­புக்­கொள்­ளாமல் ஒதுங்கியிருக்­கிறார்.

 

தந்தை கமல் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படப்­பி­டிப்­புக்­காக காத்­தி­ருக்­கிறார்.

 

நடிப்­பி­லி­ருந்து சற்று விலகி நிற்கும் ஸ்ருதி­ஹாசன் விரைவில் பொப் பாட­கி­யாக வலம் வர­வி­ருக்­கி­றாராம்.

 

இசை, பாடல் பாடு­வதில் ஏற்­க­னவே ஸ்ருதி­ஹாசன் திற­மையை நிரூ­பித்­தி­ருக்­கிறார். இதையடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்லும் வித­மாக இம்­மு­யற்­சியை அவர் மேற்­கொண்­டி­ருக்­கிறார் என்று தெரி­கி­றது.

 

மேற்­கத்தேய பாட­கர்கள் பலர் சொந்­த­மாக இசை குழு நடத்தி மேடையில் பாடி ஆடி கைநி­றைய சம்­பா­திக்­கின்­றனர்.

 

அப்­ப­டி­யொரு யுக்­தியில் தனது கவ­னத்தை திருப்பியிருக்­கிறார் ஸ்ருதி.

 

தனது இசை திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அடுத்த முயற்சியாக விரைவில் தனி­பாடல் ஒன்று வெளி­யி­ட­வி­ருக்கும் அவர் அப்­பா­ட­லுக்கு மேடையில் ஆடவும் முடிவு செய்­தி­ருக்­கிறார்.

 

வெளி­நா­டு­க­ளிலும் மேடைகளில் இசை,  பொப் பாடல், நடன நிகழ்ச்சி நடத்தவும் அவர் ஆலோசித்து வருகிறார்.

(Visited 118 times, 1 visits today)

Post Author: metro