பாதுகாப்பு குறித்து முன்னணி வீரர்கள் அச்சம் தெரிவிப்பு; பாகிஸ்தானுக்கான விஜயத்தை மே. தீவுகள் பிற்போட்டது

பாகிஸ்­தானில் தங்­க­ளது பாது­காப்பு குறித்து முன்­னணி வீரர்கள் அச்சம் வெளி­யிட்­டதன் கார­ண­மாக அந்­நாட்­டுக்­கான கிரிக்கெட் விஜ­யத்தை மேற்­கிந்­தியத் தீவுகள் பிற்­போட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரில் பங்­கு­பற்­றும்­
பொ­ருட்டு மேற்­கிந்­தியத் தீவுகள் அணி அங்கு செல்­வ­தாக இருந்­தது.

இரண்டு அணி­க­ளுக்கும் வாய்ப்பு ஒன்று உரு­வா­கும்­போது இந்த கிரிக்கெட் விஜ­யத்தை அடுத்த வருடம் நடத்­து­வது குறித்து திட்­ட­மி­டப்­படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்­டாரம் தெரி­வித்­தது.

பாகிஸ்­தா­னுக்­கான விஜ­யத்தை மேற்­கிந்­தியத் தீவுகள் பிற்­போட்­டமை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எவ்­வித கருத்தும் வெளி­யி­ட­வில்லை.

‘‘சில வீரர்­க­ளுடன் மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபை பேசி­ய­போது அவர்கள் பாகிஸ்தான் செல்­வ­தற்கு ஆர்வம் காட்­ட­வில்லை.

சிரேஷ்ட வீரர்­க­ளான கிறிஸ் கெய்ல், கீரொன் பொலார்ட், ட்வேன் ப்ராவோ போன்­ற­வர்கள் இந்தத் தொடர் இடம்­பெற்றால் அதில் தாங்கள் பங்­கு­பற்­றப்­போ­வ­தில்லை என தெளி­வாக கூறினர்’’ என ஒரு வட்­டாரம் தெரி­வித்­தது.

‘‘பாகிஸ்­தானில் பாது­காப்பு நிலைவ­ரங்கள் மற்றும் ஏற்­பா­டுகள் குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் முக­வர்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­த­ போ­திலும் பாது­காப்பு குறித்து மேற்­கிந்­தியத் தீவுகள் வீரர்கள் சங்கம் அச்சம் வெளி­யிட்­டது’’ என அந்த வட்­டாரம் மேலும் தெரி­வித்­தது.

பாது­காப்பு தொடர்­பாக ஆராய்­வ­தற்கு சென்ற பாது­காப்பு நிபு­ணர்கள் சமர்ப்­பித்த சாத­க­மான அறிக்­கை­களைத் தொடர்ந்து உலக பதி­னொ­ருவர் அணி லாகூ­ருக்கு கடந்த செப்­டெம்பர் மாதம் விஜயம் செய்து 3 சர்­வ­தேச இரு­பது போட்­டி­களில் விளை­யா­டி­யி­ருந்­தது.

அதன்பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னமும் கிட்­டத்­தட்ட பலம் குன்­றிய அணி ஒன்றை ஒற்றை சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் விளை­யாட லாகூ­ருக்கு கடந்த 29ஆம் திகதி அனுப்­பி­யி­ருந்­தது.

ஆனால் இந்த இரண்டு கிரிக்கெட் விஜ­யங்­களும் சில மேற்­கிந்­தியத் தீவுகள் வீரர்­களைத் திருப்திப் படுத்­தி­ய­தாகத் தெரி­ய­வில்லை என இன்­னு­மொரு வட்­டாரம் தெரி­வித்­தது.

இதே­வேளை, நியூ­ஸி­லாந்­துக்கு மெற்­கிந்­தியத் தீவுகள் எதிர்­வரும் 25ஆம் திகதி பய­ணிக்­க­வுள்­ளமை மற்றும் லாகூரில் பனி­மூட்டம் நில­வு­கின்­றமை என்­ப­னவே இந்த விஜயம் பிற்­போ­டப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள் என இன்­னு­மொரு வட்­டாரம் தெரி­வித்­தது.

‘‘மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையினர் தங்களது முயற்சியிலிருந்து விலகாதததுடன் இந்த கிரிக்கெட் விஜயம் இடம்பெறும் எனவும் அவர் கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள்’’ என அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

(Visited 78 times, 1 visits today)

Post Author: metro