பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து சந்திக்க ஹத்துருசிங்க இராஜினாமா; இலங்கை அணியின் பயிற்றுநராக நியமிக்கப்படுவாரா?

பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இரா­ஜி­னாமா கடிதத்தை செய்­துள்ளார்.

அவ­ரது இரா­ஜி­னா­மாவை பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்­றுக்­கொள்­ளுமா? அப்­படி ஏற்­றுக்­கொண்டால் ஹத்­து­ரு­சிங்க வெளி­யே­று­வாரா? என்­பவை விரைவில் தெரி­ய­வரும்.

இரா­ஜி­னாமாவை ஹத்­து­ரு­சிங்­காவோ பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபையின் உயர் அதி­கா­ரி­களோ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக உறு­தி­செய்­யவும் இல்லை, மறு­த­லிக்­கவும் இல்லை.

இதே­வேளை, ஹத்­து­ரு­சிங்­கவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நாடி, அவ­ருடன் பேரம் பேசி வரு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.

ஹத்­து­ரு­சிங்­கவின் பதவிக் காலத்தில் பங்­க­ளாதேஷ் பெரு­வா­ரி­யாக முன்­னேற்றம் அடைந்­துள்­ள­போ­திலும் அவர் தற்­போது வகித்­து­வரும் பாத்­திரம் குறித்து அதி­ருப்­தி­ கொண்­டுள்­ள­தற்­கான அறி­கு­றிகள் அதி­க­ரித்­துள்­ளன.

அவர் இதற்கு முன்னர் ஒரு தடவை தனது இரா­ஜி­னா­மா கடிதத்தை கடந்த வருடம் அக்­டோபர் மாதம் சமர்ப்­பித்­த ­போ­திலும் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை அதனை ஏற்க மறுத்­து­விட்­டது.

அத்­துடன் பயிற்­றுநர் பத­வியைத் தொடர்­வ­தற்கு ஹத்­து­ரு­சிங்வை பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை இணங்­க­வைத்­தது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் புதிய பயிற்­றுநர் ஒரு­வரை நிய­மிப்­ப­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கிறஹம் போர்ட் பதவி வில­கிய பின்னர் நிரந்­தரப் பயிற்­றுநர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டா­த­துடன் நிக் போத்தாஸ் இடைக்­காலப் பயிற்­று­ந­ராக செயற்­பட்டு வரு­கின்றார்.

இந்­திய கிரிக்கெட் விஜய முடிவில் அதா­வது அடுத்த வருட முற்­ப­கு­தியில் புதிய பயிற்­றுநர் நிய­மிக்­கப்­ப­டுவார் எனவும் குறும்­பட்­டி­யலில் மூன்று வெளி­நாட்­ட­வர்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும் இப்­போ­தைய சூழ் நி­லையில் இதில் மாற்றம் இடம்­பெற வாய்ப்பு இருப்­ப­தாகத் தென்­ப­டு­கின்­றது. ஏனெ னில் மூன்று மாதங்­க­ளுக்கு முன்­னரே ஹத்­து­ரு­சிங்­கவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் நாடி­யி­ருந்­தது.

ஒரு­வேளை இலங்கை பயிற்­றுநர் பத­வியை ஹத்­து­ரு­சிங்க ஏற்றால் அவ­ருக்கு தற்­போது கிடைக்கும் அதே சம்­பளம் அல்­லது அதனை விட சற்று அதி­க­மான சம்­ப­ளத்தை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் தயா­ராக இருப்­ப­தாக அறி­யக்­கி­டைக்­கின்­றது.

எவ்­வா­றா­யினும் 2019 உலகக் கிண்ணப் போட்­டிகள் வரை பங்­க­ளா தேஷ் கிரிக்கெட் சபை­யுடன் ஹத்­து­ரு­சிங்க ஒப்­பந்தம் செய்­துள்­ளதை புறந்­தள்­ளி­வி­ட­மு­டி­யாது. ஒரு­வேளை ஒரு மாத முன்­ன­றி­வித்­த­லுடன் வில­கு­வ­தற்­கான வாய்ப்பு ஒப்­பந்­தத்தில் இருப்பின் ஹத்­து­ரு­சிங்க இங்கு வந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

ஹத்­து­ரு­சிங்­கவின் பதவிக் காலத்தில் 2015 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் கால் இறு­தி­வ­ரையும், 2017 சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டி­களில் அரை இறு­தி­வ­ரையும் முன்­னே­றிய பங்­க­ளாதேஷ் தனது சொந்­த­மண்ணில் நடை­பெற்ற இரு­த­ரப்பு சர்­வ­தேச ஒருநாள் தொடர்­களில் இந்­தியா, பாகிஸ்தான், தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடு­களை வெற்­றி­கொண்­டது.

அது மட்டுமல்லாமல் டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை தனது சொந்த மண் ணில் வெற்றி கொண்டு வரலாறு படைத்த பங்களாதேஷ், அந்நிய மண்ணில் இலங்கையை வெற்றி கொண்ட பெருமையையும் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவுக்கான அண்மைய கிரிக்கெட் விஜயத்தில் மூவகைத் தொடர்களிலும் பங்களாதேஷுக்கு தோல்விகளே மிஞ்சின.

(Visited 83 times, 1 visits today)

Post Author: metro