2006 : நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ந.ரவிராஜ் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 10

1444 : ஹங்­கேரி, போலந்து ஆகி­ய­வற்றின் அரசர் மூன்றாம் விளா­டிஸ்லாஸ் பல்­கே­ரி­யாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்­டோமான் பேர­ர­சுடன் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார்.

1520 : டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்­டி­ய­னினால் சுவீ­டனை முற்­று­கை­யி­டப்­பட்­ட­போது ஸ்டொக்ஹோம் நகரில் பலர் கொல்­லப்­பட்­டனர்.

1674 : ஆங்­கி­லே­ய-­டச்சு போரை­ய­டுத்து, வெஸ்ட்­மின்ஸ்டர் உடன்­பாட்டின் படி, அமெ­ரிக்­காவில் ஸ்தாபிக்­கப்­பட்ட “புதிய நெதர்­லாந்து” பிராந்­தி­யத்தை இங்­கி­லாந்­திடம் நெதர்­லாந்து ஒப்­ப­டைத்­தது.

1847 : ஸ்டீவன் விட்னி என்ற பய­ணிகள் கப்பல் அயர்­லாந்தின் தெற்குக் கரையில் மூழ்­கி­யதில் 92 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1871 : காணாமல் போன­தாகக் கரு­தப்­பட்ட ஸ்கொட்­லாந்தின் நாடுகாண் பயணி, டேவிட் லிவிங்ஸ்­டனைத் தான்­சா­னி­யாவில் தாம் கண்­ட­தாக நாடுகாண் பய­ணியும் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறி­வித்தார்.

1928 : ஹிரோ ஹிட்டோ, ஜப்­பானின் 124 ஆவது மன்­ன­ரானார்.

1970 : சோவி­யத்தின் லூனா 17 விண்­கப்பல் சந்­தி­ர­னுக்கு “லூனாகோட்” எனப்­படும் தானி­யங்கி ஊர்­தியைக் கொண்டுசென்­றது.

1971 : கம்­போ­டி­யாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நக­ரையும் விமான நிலை­யத்­தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமா­னங்­களை அழித்­தன.

1972 : இங்­கி­லாந்தின் பேர்­மிங்­ஹாமில் இருந்து புறப்­பட்ட விமானம் கடத்­தப்­பட்டு கியூபாவில் இறக்­கப்­பட்­டது. கடத்­தல்­கா­ரர்கள் கியூ­பாவில் கைது செய்­யப்­பட்­டனர்.

1983 : மைக்­ரோசொப்ட் விண்டோஸ் 1.0 பதிப்பை பில்கேட்ஸ் அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

1995 : நைஜீ­ரி­யாவில் சுற்றுச் சூழல் ஆத­ர­வாளர் கென் சரோ-­வீவா என்­ப­வரும் அவ­ரது 8 சகாக்­களும் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

1999 : பாகிஸ்­தானில் தேசத் துரோகம் மற்றும் சதிச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக முன்னாள் பிர­தமர் நவாஸ் ஷெரீப்­புக்கு எதி­ராக வழக்குத் தொட­ரப்­பட்­டது.

2006 : தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

2007 : மலே­ஷி­யாவில் தேர்தல் மறு­சீ­ர­மைப்பை வலி­யு­றுத்தி சுமார் 40,000 பேர் ஊர்­வலம் சென்றனர்.

2008 : செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்ஸ் விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

(Visited 36 times, 1 visits today)

Post Author: metro