15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகம்

எரிபொருள் விநியோகம் இன்று மா‍லை முதல் முழுமையாக வழமைக்கு திரும்பும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

15 ஆயிரம் மெட்ரிக் தொன்னுக்கு அதிகமான எரிபொருள் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தின் அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றுக்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்டங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றில் இன்னும் எரிபொருள் பெறுவதில் தாமதம் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்,

(Visited 44 times, 1 visits today)

Post Author: metro