சூரியவெவவில் விபத்து; ஒருவர் பலி

சூரியவெவ ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் மஹஆர 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து வீதியால் சென்று கொண்டிருந்த பாதசாரியொருவரை மோதியதில் நேற்றிரவு இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நபடகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான நபரொருவரே இவ்வாறு மோட்டார் சைக்கிளில் மோதுண்ட உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro