விசேட சுற்றிவளைப்பில் 1,800 பேர் கைது


நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நேற்று இரவு 11 மணிமுதல் இன்று அதிகாலை 3 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் மூலம் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் ரகுணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் 962 பேரும், பிடியாணைகள் தொடர்பில் 758 பேரும், தேடப்பட்டுவந்த 86 சந்தேகநபர்கள் உள்ளிட்ட 1800க்கும் அதிகமானேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட விரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் 948 சுற்றிவளைப்புகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் 16.362 பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

(Visited 54 times, 1 visits today)

Post Author: metro