‘ஜங்கிள் புக்’ பாணியில் மீண்டும் உருவாகும் ‘லயன் கிங்’: பாடகி பியோன்ஸேவும் இணைகிறார்

வேல்ட் டிஸ்னி நிறுவனத்தின் ‘லயன் கிங்’ படம் மீண்டும் லைவ் அக்‌ஷன் அனிமேஷன் படமாக உருவாகிறது. படம் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவான பியோன்ஸே நொவெல்ஸும் இப் படத்தில் பங்காற்ற வுள்ளார். டிஸ்னி நிறுவனத்தின் புகழ்பெற்ற அனிமேஷன் படங்களில் ஒன்று ‘லயன் கிங்’.

ஷேக்ஸ்பியரின் ‘ஹொம்லெட்’ கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் 1994ஆம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அத்துடன் பல வசூல் சாதனைகளையும் படைத்தது.

டிஸ்னி நிறுவனத்தின் புகழ்பெற்ற பல அனிமேஷன் படங்கள் லைவ் அக்‌ஷன் படங்களாக ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. ‘எலிஸ் இன் வொண்டர்லேண்ட்’, ‘சிண்ட்ரெல்லா’, ‘தி ஜங்கிள் புக்’, ‘பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’ உள் ளிட்ட படங்களின் நவீன ரீமேக் வடிவங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது ‘லயன் கிங்’ படமும் லைவ் ஆக்‌ஷன் படமாக ரீமேக் செய்யப்படவுள்ளது.

‘ஐயர்ன் மேன்’ 1, 2, ‘செஃப்’, ‘தி ஜங்கிள் புக்’ (2016) உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோன் ஃபேவ்ரூ, ‘லயன் கிங்’ ரீமேக்கை இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிம்பாவின் குரலாக டொனால்ட் க்ளோவர், முதல் லயன் கிங் படத்தில் முஃபாஸா கதாபாத்திரத்துக்கு குரல் கொடுதத் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், சிம்பாவின் ஜோடி நாலாவின் குரலாக பாடகி பியோன்ஸே உள்ளிட்டோர் படத்தில் பங்காற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தி ஜங்கிள் புக்’ பாணியிலேயே 3டி கிராஃபிக்ஸ் கதாபாத்திரங்களுடன் ‘லயன் கிங் 2019’ உருவாகிறது. ஜங்கிள் புக்கை விட மேம்பட்ட கிராஃபிக்ஸ் படத்தில் இருக்கும் என்று இயக்குநர் ஜோன் தெரிவித்துள்ளார்.

(Visited 36 times, 1 visits today)

Post Author: metro