பெற்றோல் நெருக்கடி தொடர்பான அமைச்சரவை உப குழு அறிக்கை நாளை மறுதினம் – அமைச்சர் சரத் அமுனுகம

பெற்றோல் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை உபக் குழு அறிக்கை நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பெற்றோல் நெருக்கடி தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மூவரடங்கிய அமைச்சரவை உபக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த உப குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளையடுத்து குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

Post Author: metro