காணாமல் போன பாட­சாலை மாணவன் பத்­தனை ஆற்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்பு!

(க.கிஷாந்தன்)

திம்­புள்ள, பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட போகா­வத்தை பகு­தி­யி­லுள்ள ஆற்­றி­லி­ருந்து போகா­வத்தை பகு­தியைச் சேர்ந்த ஆறு வயது மாண­வனின் சடலம் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இம்­மா­ணவன் கடந்த 11 ஆம் திகதி பகல் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்­பாத நிலையில் உற­வி­னர்கள், பிர­தே­ச­வா­சிகள் பிர­தேசம் முழு­வதும் உற­வினர் வீடு­க­ளிலும் தேடி­யுள்­ளனர்.

இவர் தொடர்­பாக எவ்­வித தக­வலும் கிடைக்­காத நிலையில்,  இன்று காலை பிர­தே­ச­வா­சிகள் தேடுதல் மேற்­கொண்ட போதே ஆற்றில் சட­ல­மாக கிடப்­பதை கண்­டுள்­ளனர். இம்­மா­ணவன் ஆற்­ற­ருகில் இருக்கும் கொய்யா மரத்தில் கொய்­யாப்­பழம் பறிக்­கச்­சென்று தவறி வீழ்ந்தே இறந்­தி­ருப்­ப­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

(Visited 38 times, 1 visits today)

Post Author: metro