தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத்தை வலி­யு­றுத்தி சாய்ந்­த­ம­ருதில் மனித சங்­கிலிப் போராட்டம்!

(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத்தை ஏற்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற போராட்­டங்­களில் ஓர் அங்­க­மாக நேற்று சாய்ந்­த­ம­ருது நகரில் மனித சங்­கிலிப் போராட்டம் இடம்­பெற்­றது.

சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பெரிய பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா தலை­மையில் நடை­பெற்ற இப்­போ­ராட்­டத்தில், உல­மாக்கள், கல்­வி­மான்கள், மரைக்­கா­யர்கள், வர்த்­த­கர்கள், இளை­ஞர்கள் உட்­பட பெரும் எண்­ணிக்­கை­யானோர் பங்­கேற்­ற­துடன் அவர்கள் நெடுஞ்­சாலை நெடு­கிலும் கைகோர்த்த வண்ணம் நின்று சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்­றத்தை வலி­யு­றுத்தி பல்­வேறு கோஷங்­களை எழுப்­பினர்.

(Visited 22 times, 1 visits today)

Post Author: metro