ஈரான் – ஈராக் எல்லையில் பூகம்பம்: 348 பேர் பலி; 6,500 பேர் காயம்

ஈரான் – ஈராக் எல்­லை யில் நேற்று முன்­தினம் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்­தினால் குறைந்­தது 348 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.


7.3 ரிச்டர் அளவில் பதிவான இந்த பூகம்­பத்­தின் இடி­பா­டு­களுக்குள் சிக்­கி­யவர்களை மீட்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக இரு நாடு­க­ளி­னதும் அரச ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

சுமார் 70, 000 பேருக்கு புக­லி­டங்கள் தேவைப்­ப­டு­வ­தாக ஈரானின் உதவி நிறு­வனம் ஒன்று தெரி­வித்­துள்­ளது. ஈரானின் கேர்­மான்ஷா மாகா­ணத்தில் அதிகமானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் 6,300 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனைத் தொடர்ந்து கேர்­மான்ஷா மாகா­ணத்தில் 3 நாட்கள் துக்­க­தி­ன­ம் அனுஷ்­டிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு, ஈராக்கில் 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுமார் 5,341 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாகவும் அந்­நாட்டின் இஸ்னா மற்றும் காபர் ஆகிய செய்தி நிறு­வ­னங்கள் சுகா­தார அமைச்­சினை மேற்­கோள்­காட்டி செய்தி வெளி­யிட்­டுள்­ளன.


ஈரான் -– ஈராக் எல்­லை­யி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 15 கி.மீ. தொலை­வி­லுள்ள சார்போல் – இ – ஸகாப் நகரில் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டின் அவ­ச­ர­சேவைப் பிரிவின் தலைமை அதி­காரி பேர் ஹொஸெய்ன் கூலிவான்ட் தெரி­வித்­துள்ளார்.
மீட்புப் பணி­யா­ளர்கள் ஈரானின் கிராமப் புறங்­களை நெருங்­கி­யுள்ள நிலையில், உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கலாம் என எதிர்­பார்க்கப்படு­வ­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ஈரானின் கிராமப் புறங்­க­ளி­லுள்ள அதி­க­மான வீடுகள் செங்­கற்­க­ளினால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளதால் இது­போன்­றதொரு பாரிய பூகம்­பத்தில் அவை இல­கு­வாக இடிந்­து­விழக் கூடி­யவை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தலை­ந­க­ரி­லுள்ள பிர­தான வைத்­தி­ய­சா­லையும் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் அங்கு அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க முடி­யாதிருப்பதாகவும் ஈரானின் அவ­சர சேவைப் பிரிவின் தலைவர் பிர்ஹொ ஸெய்ன் கூலிவான்ட் தெரி­வித்­துள்ளார்.


பூகம்­பத்­தினால் ஈரானின் போக்­கு­வ­ரத்­துகள் தடைப்­பட்­டுள்­ளதால் கிராமப் புறங்­களில் வசிப்­ப­வர்கள் அச்­ச­மாக உள்­ள­தெ­னக் கூறியிருப்பதாகவும் மீட்புப் பணியில் பாது­காப்புப் படை­யி­னரும் ஈடு­பட்­டுள்­ளனர் எனவும் அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் அப்­டோல்­ரெஸா ரஹ­மானி பஸ்லி தெரி­வித்­துள்ளார்.

ஈராக்கின் டார்­பான்­டிகான் நகரில் பாரிய சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். டார்­பான்­டிகான் நக­ரி­லுள்ள பிர­தான வைத்­தி­ய­சாலை சேத­ம­டைந்­துள்­ள­தோடு மின்­சா­ரமும் தடைப்­பட்­டி­ருப்­பதால் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு சுலை­மா­னியா நகர் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படுகின்றது. மேலும், இங்கு நிலைமை மோசமாக உள்ளது எனவும் குர்திஸ் சுகாதார அமைச்சர் ரேகாட் ஹமா ரஷீட் தெரிவித்துள்ளார்.


மின்­சார வயர் ஒன்று அறுந்து வீழ்ந்­ததால் 12 வயது சிறுவன் ஒருவன் உயி­ரி­ழந்­துள்­ள­தாக உள்ளூர் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். பாரி­ய­தொரு நில அதிர்வை உணர்ந்­த­தாக துருக்­கியின் தென் கிழக்கு நக­ரான டியார்­பாகிர் வாசிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்தப் பூகம்­பத்தின் தாக்கம் இஸ்­ரேலின் சில பகு­தி­க­ளிலும் உண­ரப்­பட்­ட­தாக அந்­நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2003ஆம் ஆண்டு ஈரானின் பாம் நகரில் 6.6 ரிச்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தினால் 26, 000 பேர் உயிரிழந்தமை நினைவுகூரத்தக்கது.

(Visited 64 times, 1 visits today)

Post Author: metro