தோனியை விமர்சிப்பவர்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி

சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் தோனியின் எதிர்­கா­லத்­திற்கு ஆது­ர­வாக இந்­திய கிரிக்கெட் அணியின் முகா­மைத்­துவம் குரல் கொடுத்­துள்­ளது.

தோனியை இலக்கு வைப்­பது நியா­ய­மல்­ல­வென அணித் தலைவர் விராத் கோஹ்லி அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார். தற்­போது இந்­திய அணி பயிற்­றுநர் ரவி சாஸ்­தி­ரியும் தோனிக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­துள்ளார்.

சிறந்த வீரர்கள் தங்­க­ளது எதிர்­கா­லங்­களைத் தாங்­க­ளா­கவே தீர்­மா­னிப்பர் என மஹேந்­திர சிங் தோனிக்கு ஆத­ர­வாக ரவி சாஸ்­திரி குறிப்­பிட்­டுள்ளார்.

நியு­ஸி­லாந்­துக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் இந்­தியா தோல்வி அடைந்­தது. அப்­போட்­டியில் ஒரு முனையில் விராத் கோஹ்லி அதி­ர­டியில் இறங்க, மறு­மு­னையில் தோனி 37 பந்­து­களில் 49 ஓட்­டங்­களைப் பெற்றார்.

இதனை முன்னாள் வீரர்­களும் தொலைக்­காட்சி வர்­ண­னை­யா­ளர்­களும் கடு­மை­யாக விமர்ச்­சித்­தி­ருந்­தனர்.
தோனியை மாத்­திரம் ஏன் இலக்கு வைக்­கின்­றார்கள் என்­பது தனக்குப் புரி­ய­வில்லை என விராத் கோஹ்லி கூறினார்.

சாஸ்­தி­ரியோ, பொறாமை கார­ண­மாக சிலர் தோனியை விமர்­சிப்­ப­தாக தெரி­வித்தார். அதி­ர­டிக்கு பெயர் பெற்ற 20 ஓவர் கிரிக்­கெட்டில் தோனியின் துடுப்­பாட்ட வேகம் மந்­த­மாக உள்­ளது.

எனவே, இளை­ஞர்­க­ளுக்கு வழி­விடும் வகையில் 20 ஓவர் கிரிக்­கெட்­டி­லி­ருந்து அவர் ஓய்­வு­பெற வேண்டும் என இந்­தி­யாவின் முன்னாள் வீரர்­க­ளான வி.வி.எஸ்.லக்ஸ்மன், அஜித் அகார்கர், ஆகாஷ் சொப்ரா உட்­பட இன்னும் சிலர் கூறினர்.

ஆனால், தோனியை விட்­டுக்­கொ­டுக்­காத இந்­திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, தோனியை விமர்­சிப்­பது எவ்­வ­கை­யிலும் நியா­ய­மற்­றது. எமது அணியின் வெற்­றி­களில் அவ­ரது பங்­க­ளிப்பு தொடர்ந்து இருக்­கவே செய்­கின்­றது. வயதை குறி வைத்து சிலர் அவரை விமர்­சிக்­கி­றார்கள் என்றார்.

வய­துக்கும் திற­மைக்கும் முடிச்சுப் போடு­வது தவறு என்­பதை தோனி மாத்­திரம் அல்ல இன்னும் பல வீரர்கள் அண்­மைக்­கா­ல­மாக நிரூ­பித்து வந்­துள்­ளதை விமர்­ச­கர்கள் கவ­னிக்கத் தவ­றி­விட்­டார்கள் என தோனியின் இர­சி­கர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

இதே­வேளை, தோனிக்கு ஆத­ர­வாக இந்­திய அணியின் தலைமைப் பயிற்­றுநர் ரவி சாஸ்­தி­ரியும் கருத்து வெளியிட்­டுள்ளார்.

தோனி சரி­யாக விளை­யா­டக்­கூ­டாது, அவ­ருக்கு மோச­மான நாட்கள் அமைய வேண்டும் என்று நம்மை சுற்­றி­யுள்ள பொறாமை பிடித்த பலர் நினைப்­பது போல் தோன்­று­கின்­றது. இன்னும் சிலர் அவ­ரது கிரிக்கெட் வாழ்க்கை எப்­போது முடி­வ­டையும் என்­பதை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றார்கள்.

ஆனால், தோனியை போன்ற அற்­பு­த­மான வீரர்கள் தங்­க­ளது எதிர்­கா­லத்தை தாமா­கவே தீர்­மா­னிப்­பார்கள் என்றார் ரவி சாஸ்­திரி.

தோனி மீதான விமர்­ச­னங்கள் என்னில் எந்­த­வித மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­தாது. அணியில் தோனி எந்த இடத்தில் இருக்­கிறார் என்று எங்­க­ளுக்கு தெரியும். அவர் ஒரு அரு­மை­யான அணி வீரர்.

முன்பு மிகச்­சி­றந்த அணித் தலை­வ­ராகத் திகழ்ந்தார். இப்­போது அணியின் முக்­கி­ய­மான வீர­ராக விளங்­கு­கிறார் என அவர் மேலும் கூறினார்.

இலங்கை, அவுஸ்­தி­ரே­லிய தொடர்­களில் இந்­திய அணியின் வெற்­றி­களில் தோனி வழங்­கிய பங்­க­ளிப்­பையும் அவர் குறிப்­பி­டத்­த­வ­ற­வில்லை.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் 50 ஓவர் கிரிக்கெட், உலக இருபது 20 கிரிக்கெட், மினி உலகக் கிண்ணம் (சம்பியன்ஸ் கிண்ணம்) ஆகிய மூன்றிலும் உலக சம்பியன் பட்டங்களை வென்றுகொடுத்த ஒரே ஒரு அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி ஆவார்.

(Visited 69 times, 1 visits today)

Post Author: metro