இந்திய வெளிவிவகார அமைச்சினால் புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரல்: இறுதித் திகதி நவம்பர் 19

(வத்­து­காமம் நிருபர்)

இலங்­கையில் வசிக்கும் இந்­திய வம்­சா­வ­ழி­யி­ன­ருக்கு குறு­கிய கால புலமைப் பரி­சில்­களை வழங்­கு­வ­தற்கு இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சு விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது. விண்­ணப்பம் முடிவு திகதி இம்­மாதம் 19 ஆம் திக­தி­யாகும்.
இந்­தி­யாவை அறிந்­து­கொள்­ளுங்கள் என்ற வேலைத்­திட்­டத்தின் கீழ் இந்தப் புலமைப்பரி­சில்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இது 25 நாட்­களைக் கொண்ட குறு­கிய கால புல­மைப்­ப­ரி­சி­லாகும்.

பொரு­ளா­தாரம், கைத்­தொழில், கல்வி, விஞ்­ஞானம், தொழில்நுட்பம், தொடர்­பாடல், தகவல் தொழில் நுட்பம் முத­லான துறை­களில் இது அமைந்­துள்­ளது.  இந்­தியா அல்­லாத நாடு­களில் வசிக்கும் இந்­தி­யர்­களில் 18–30 வய­து­டை­ய­வர்கள் இதற்கு விண்­ணப்­பிக்க முடியும். பட்­ட­தா­ரி­க­ளான ஆங்­கில மொழியில் பரிச்­ச­ய­முள்­ள­வர்­க­ளும் விண்­ணப்­பிக்க முடியும்.

மேல­திக விப­ரங்­க­ளுக்கு www.kip.gov.in , அல்­லது hoc.kandy@mea.gov.inமூலம் அல்­லது 081-2222652/ 2223786 என்ற தொலை­பேசி இலக்­கத்­துடன் அல்லது http://www.ahcikandy.org/pages.php?id=23 என்ற இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

(Visited 26 times, 1 visits today)

Post Author: metro