பெண்ணின் புகைப்­ப­டங்­களை பேஸ்­புக்கில் வெளி­யிட போவ­தாக அச்­சுறுத்தி இரு தட­வைகள் பணம் பெற்ற கிராண்ட்பாஸ் நபர் கைது!

(எஸ்.கே.)

திரு­மண விருந்து ஒன்றில் சந்­தித்த திரு­ம­ண­மான பெண் ஒரு­வரை புகைப்­ப­ட­மெ­டுத்த இளைஞர் ஒருவர் அந்த புகைப்­ப­டங்­களை பேஸ்­புக்கில் வெளி­யி­டு­வ­தாக அச்­சு­றுத்தி இரண்டு சந்­தர்ப்­பங்­களில் 24, 000 ரூபாவைப் பெற்றுக் கொண்ட நிலையில் மூன்­றா­வது முறை­யாக பணம் கேட்டு வந்­த­போது இளை­ஞரை பொலிஸார் கைது செய்த சம்­ப­வ­மொன்று பிய­கம மல்­வான பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

மல்­வான ரக்­ ஷபான பிர­தே­சத்தைச் சேர்ந்த 18 வய­தான திரு­ம­ண­மான இளம் பெண் திரு­மண விருந்­தொன்றில் கலந்து கொண்­டி­ருந்­த­போது அந்த இடத்­துக்கு வந்த சந்­தேக நப­ரான கிராண்ட்பாஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த 25 வய­தான திரு­ம­ண­மாகாத இளைஞர் ஒருவர் யுவ­தியை திருட்டுத் தன­மாக எடுத்த புகைப் ­படங்­களை வைத்துக் கொண்டே இவ்­வாறு அச்சுறுத்தி பணம் பெற்றுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

(Visited 99 times, 1 visits today)

Post Author: metro