வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜரான பெண் மதுபோதையில் குழப்பம்! பொலிஸார் மீதும் தாக்குதல்:

(எஸ்.கே.)

வழக்கு விசா­ர­ணைக்­காக நீதி­மன்­றத்­துக்குச் சென்ற பெண் ஒருவர் அதிக மதுபோதையில் குழப்பம் ஏற்­ப­டுத்தும் வகையில் நடந்து கொண்­டதால் கல்­க­முவ நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 10 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை சுமார் 15 நிமி­டங்கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.

பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட வழக்­கொன்­றுக்கு ஆஜ­ரா­வ­தற்­காக இப்பெண் அன்­றைய தினம் நீதி­மன்­றத்­துக்கு வந்து, பின்னர் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேறி மீண்டும் நீதி­மன்­றத்­துக்கு வந்­த­போது பிர­தான வாயி­லிலி­ருந்த பொலி­ஸா­ருக்கு இப்பெண் மீது சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது.

பொலிஸார் அப்­பெண்ணை சோத­னை­யிட்­ட­போது அப்பெண் மது அருந்­தி­யி­ருப்­பதை அறிந்து கொண்டு நீதி­மன்­றத்­துக்குள் செல்ல வேண்­டா­மெ­னவும் நீதி­மன்ற வளா­கத்தை விட்டு வெளி­யே­றும்­படி அறி­வித்­துள்­ளனர்.

இருந்தும் பொலி­ஸாரின் அறி­விப்பை மீறி இப்பெண் நீதி­மன்ற வளா­கத்­துக்குள் நுழைந்து கூக்­கு­ர­லிட்டு குழப்பம் ஏற்­ப­டுத்தும் வகையில் நடந்து கொண்­டுள்ளார். இப்­பெண்ணைத் தடுக்க முயன்ற பொலிஸ் அதி­கா­ரி­க­ளையும் இப்பெண் தாக்­கி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும், பொலிஸார் இப்­பெண்ணைக் கைது செய்து கல்­க­முவ பொலிஸ் நிலை­யத்­துக்கு கொண்டு சென்று, பின்னர் வைத்திய பரிசோதனைக்காக கல்கமுவ வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர் செய்துள்ளனர்.

(Visited 49 times, 1 visits today)

Post Author: metro