பாலா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘வர்மா’

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. பாலா இயக்கும் இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கின்றார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பெர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாலா.

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற பெயரில் வெளியாகி வசூல் குவித்த இந்த படத்திற்கு தமிழில் ‘வர்மா’ என்று பெயர் சூட்டியுள்ளார் பாலா. இந்த படத்தின் கதாநாயகி, தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாத பாலா அந்த தகவல்களையும் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது பாலா ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடிப்பில் இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 59 times, 1 visits today)

Post Author: metro