புதிய காத்தான்குடியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

(புதிய காத்­தான்­குடி நிருபர்)

மட்­டக்­க­ளப்­பு — ­காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புதிய காத்­தான்­குடி பகு­தியில் கேரள கஞ்­சாவை விற்­பனை செய்த நபரை காத்­தான்­குடி பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

குறித்த நபர் கேரள கஞ்­சா­வை விற்­பனை செய்யும் நோக்கில் வீட்டில் பதுக்கி வைத்­தி­ருந்த நிலையில் தக­வ­லொன்­றை­ய­டுத்து பொலிஸார் குறித்த வீட்டைச் சுற்றி வளைத்து சந்­தேக நபரை கைது செய்­த­துடன், அவ­ரி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு கேரள கஞ்­சாவும் மீட்­கப்­பட்­ட­தாக காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

(Visited 22 times, 1 visits today)

Post Author: metro