பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து கொண்டிருந்த மூவர் கலேவெலவில் அதிரடிப் படையினரால் கைது; தனக்கு தொடர்பில்லை என மஹ்ரூப் எம்.பி.தெரிவிப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்)

எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­படும் எரி­பொருள் பவு­ஸர்­களில் காணப்­படும் பெற்­றோலில் மண்­ணெண்ணெய் கலந்து விநி­யோ­கித்து வந்த சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்கள் மூ­வரை தம்­புள்ளை விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ளனர்.


கலே­வெல மகு­லு­கஸ்­வெவ பிர­தே­சத்­தி­லுள்ள பாழ­டைந்த கருங்கல் ஆலை ஒன்றில் குறித்த பசரை மறைத்து வைத்து சந்­தேக நபர்கள் இந்த வர்த்­த­கத்­தினை மேற்­கொண்டு வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. எம். மஹ்­ரூப்­புக்கு சொந்­த­மான எரி­பொருள் பவு­ஸர்­களில் ஒன்­றி­லேயே இந்த கலப்­படம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக மேல­திக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

எனினும், இச்­சம்­பவம் தொடர்பில் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம். ஏ. எம். மஹ்­ரூப்­பிடம் வின­வி­ய­போது, தனக்கு இந்த வர்த்­தகம் தொடர்பில் எவ்­வித தொடர்பும் இல்­லை­யென தெரி­வித்தார்.

எனினும், கைப்­பற்­றப்­பட்ட பெளசர் தனக்கு சொந்­த­மான ஒன்­றெ­னவும் அதனை தான் ஐ.ஓ.சி. நிறு­வ­னத்­துக்கு பொறுப்­ப­ளித்­துள்­ள­தா­கவும், 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்­றிய சார­தியே இந்த மோச­டியை முன்­னெ­டுத்­துள்­ள­தாக அறியக் கிடைத்­த­தா­கவும் இந்த கலப்­படம் மற்றும் மோச­டியில் ஈடு­பட்­டோ­ருக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­க­மாறு தான் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும் அவர் மெட்ரோ நியூ­ஸுக்கு தெரி­வித்தார்.

தம்­புள்ளை விசேட அதி­ரடிப் படை­யினர் வர்த்­தகம் இடம்­பெறும் இடத்தை அடையும் போது, பவு­ஸரின் சார­தியும் அவ­ரது உத­வி­யா­ளரும் எரி­பொருள் பவு­ஸ­ரி­லி­ருந்து ஹோர்ஸ் குழாய் ஒன்றை பயன்­ப­டுத்தி சுமார் 100 லீற்றர் பெற்­றோலை அகற்­றி­ய­துடன் அதற்கு ஒப்­பான அள­வு­டைய மண்­ணெண்­ணெயை சிறிய லொறி ஒன்றின் மூலம் கொண்­டு­வந்து அவற்றை எரி­பொருள் பவு­ஸரில் கலந்து கொண்­டி­ருந்­த­தாக அதி­ரடிப் படை­யினர் தெரி­விக்­கின்­றனர்.

இந்­நி­லையில், குறித்த இடத்தை சுற்­றி­வ­ளைத்த தம்­புள்ளை விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் எரி­பொருள் பௌச­ரையும், சிறிய லொறி­யையும் கைப்­பற்­றி­ய­துடன், பவு­ஸரின் சார­தி­யையும் அதன் உத­வி­யா­ள­ரையும் தப்பிச் சென்ற மற்­றொரு நப­ரையும் கைது செய்­துள்­ள­தாக விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் கட்டளை அதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எல். ரணதுங்க தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

(Visited 159 times, 1 visits today)

Post Author: metro