மட்­டக்­க­ளப்பில் பாழ­டைந்த வீட்டில் காணப்­பட்ட 7 இளை­ஞர்­களும் யுவ­தியும் கைது; யுவ­தியை மருத்­துவ பரி­சோ­த­னைக்­கு உட்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை: ஆணு­றைகள், கஞ்சா, சிகரெட் மீட்பு

(மட்டு. சோபா, காங்­கே­ய­னோடை நிருபர்)

மட்­டக்­க­ளப்பில் பாழ­டைந்த வீட்டில் யுவதி ஒருவர் உட்­பட ஏழு பேரை நேற்றுக் கைது செய்­துள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பொலிஸார் தெரி­வித்­தனர்.

தாண்­ட­வெளி, பாரதி வீதி பகு­தி­யி­லுள்ள வீடு ஒன்­றி­லேயே இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். பொலி­ஸா­ருக்குக் கிடைக்­கப்­பட்ட தகவல் ஒன்­றை­யடுத்து குறித்த பகு­திக்குச் சென்ற பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்­றி­வ­ளைப்பை மேற்­கொண்­ட­துடன் அங்­கி­ருந்து பெண் ஒரு­வ­ரையும் ஏழு இளை­ஞர்­க­ளையும் கைது­செய்­துள்­ளனர்.

கைது­செய்­யப்­பட்ட இளை­ஞர்கள் அனை­வரும் உயர்­தரம் கற்று வரும், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிக­ரெட்­டுகள் பாவித்து வந்­துள்­ள­மையும் தெரிய வந்­து­ள்ளது.

கைது செய்­யப்­பட்ட 27வய­து­டைய பெண் காத்­தான்­கு­டியை சேர்ந்­தவர் எனவும் மட்­டக்­க­ளப்பு பொலிஸார் தெரி­வித்­தனர். இந்த சுற்­றி­வ­ளைப்­பின்­போது ஆணு­றை­க­ளையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

குறித்த யுவ­தியை விசா­ரணை செய்த மட்­டக்­க­ளப்பு பொலிஸார், வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து மருத்­துவ பரி­சோ­த­னைக்­கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

(Visited 640 times, 1 visits today)

Post Author: metro