ஹெரோயின் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்த பாகிஸ்தானியப் பிரஜை கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

பெருந்­தொ­கை­யான ஹெரோயின் உருண்­டை­களை விழுங்­கிய நிலையில் இலங்கை வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


கத்­தாரின் தோஹா விமான நிலை­யத்­தி­லி­ருந்து கத்தார் விமான சேவைக்கு சொந்­த­மான கியூ. ஆர் 666 என்ற விமா­னத்தின் ஊட­பக இச்­சந்­தேக நபர் நேற்று அதி­காலை 1 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நபர் தொடர்பில் சந்­தேகம் கொண்ட பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வினர் அந்­ந­பரை ஸ்கேன் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர். அதன்­போதே இந்­ந­பரின் இரைப்­பை­யினுள் ஹெரோயின் உருண்­டைகள் காணப்­ப­டு­வ­தாக உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அத­னை­ய­டுத்து 57 வய­தான குறித்த பாகிஸ்தான் பிரஜை நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு உரிய சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு அவர் விழுங்­கி­யி­ருந்த 42 ஹெரோயின் உருண்­டைகள் வயிற்றை சுத்­தி­க­ரிக்கும் முறை மூலம் வெளியே எடுக்கப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 79 times, 1 visits today)

Post Author: metro