பொலிஸ் பாதுகாப்பில் வந்த வர்த்தகரின் காருக்கு வரிசையை மீறி பெற்றோல் பெற்றுக் கொடுத்த 8 பொலிஸ் அதிகாரிகள் உடனடி இடமாற்றம்!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

எரி­பொருள் நெருக்­கடி ஏற்­பட்ட காலப்ப­கு­தியில் களுத்­துறை தெற்கு பிர­தே­சத்தில் எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­துக்கு அருகில் ஏற்­பட்ட முரண்­பாடு தொடர்பில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் எட்டுப் பேருக்கு இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­விக்­கின்­றது.

களுத்­துறை மாவட்­டத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்­து­வக்­குவின் உத்­த­ர­வுக்­க­மை­யவே இந்த இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய 6 பொலிஸ் அதி­கா­ரிகள் பயா­கல பொலிஸ் நிலை­யத்­துக்கும், இருவர் பேரு­வளை மற்றும் அளுத்­கம ஆகிய பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பொலிஸ் பாது­காப்பு படையில் வந்த கார் ஒன்­றுக்கு களுத்­துறை தெற்­கி­லுள்ள எரி­பொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பொலிஸார் எரி­பொருள் நிரப்ப சென்­றுள்­ளனர். அதன்­போது பெற்­றோலை பெற்றுக் கொள்­வ­தற்கு அநே­க­மானோர் நீண்ட வரி­சையில் காத்­தி­ருந்த நிலையில் குறித்த பொலிஸார் வரி­சையில் காத்­தி­ருக்­காமல் முன்­னோக்கி சென்று பெற்றோல் பெற்றுக் கொள்ள முயன்­றுள்­ளனர்.

அவ்­வே­ளையில், வரி­சையில் நின்ற ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்த நிலையில் பொலி­ஸா­ருக்கும் அங்கு வரி­சையில் காத்­தி­ருந்­த­வர்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலை ஏற்­பட்­டது.

இந்­நி­லையில், அதன்­போது அங்­கி­ருந்த ஒரு­வரால் அக்­காட்சி ஒளிப்­ப­திவு செய்­யப்­பட்டு சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் இச்­சம்­பவம் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இச்­சம்­பவம் தொடர்பில் களுத்­துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரி­யா­ல­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாட்­டுக்­க­மைய முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பாது­காப்பு வாக­னங்­களில் வந்­த­வர்கள் களுத்­துறை தெற்கு பொலிஸார் என்றும் அவர்கள் பெற்றோல் பெற்றுக் கொடுக்க முயற்­சித்த கார் களுத்­துறை பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல வர்த்­தகர் ஒருவரது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு உத்தியோகத்தர்களும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 76 times, 1 visits today)

Post Author: metro