வர்த்தக வலைபந்தாட்ட ஏ பிரிவு, கலப்புப் பிரிவு; ஹட்டன் நெஷனல் வங்கிக்கு இரட்டை வெற்றி

(நெவில் அன்­தனி)

வர்த்­தக வலை­பந்­தாட்ட சங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வர்த்­தக நிறு­வன அணி­க­ளுக்கு இடை­யி­லான ஏ பிரிவு வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் ஹட்டன் நெஷனல் வங்கி சம்­பி­ய­னா­னது.


டொரிங்டன் மைதா­னத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் செலான் வங்கி அணியின் கடும் சவாலை முறி­ய­டித்த ஹட்டன் நெஷனல் வங்கி அணி 51 – 46 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.

 

இப் போட்­டியின் இடை­வே­ளை­யின்­போது செலான் வங்கி 25 – 21 என்ற கோல்கள் கணக்கில் முன்­னி­லையில் இருந்­தது.

 

ஆனால், இடை­வே­ளையின் பின்னர் வேகம், விவேகம், விறு­வி­றுப்பு அனைத்­தையும் பிர­யோ­கித்த ஹட்டன் நெஷனல் வங்கி அணி­யினர் சிறந்த நுட்­பத்­தி­ற­னுடன் விளை­யாடி வெற்­றி­பெற்­றனர். கலப்பு இனத்­தவர் பிரி­விலும் இந்த இரண்டு வங்­கி­களின் அணி­களே இறுதிப் போட்­டியில் மோதின.

 

இதில் செலான் வங்கி அணியை 21–10 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் ஹட்டன் நெஷனல் வங்கி வெற்­றி­கொண்டு இரட்டை சம்­பி­ய­னா­னது.

 

பி பிரிவில் நேஷன் ஸ்ட்ரஸ்ட் வங்கி அணியை 29–19 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட கொமர் ஷல் வங்கி அணி சம்­பி­ய­னா­னது.

 

சி பிரிவில் எச்.எஸ்.பி.சி. அணியை 28 – 14 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட மாஸ் ஷேட்லைன் சம்­பி­ய­னா­னது.

 

வர்த்­தக வலை­ப்பந்­தாட்டப் போட்­டியில் முதல் தட­வை­யாக பங்­கு­பற்­றிய டபிள்யூ.என்.எஸ் அணியை 25–8 என வெற்­றி­கொண்ட ஓமேகா ஏ அணி டி பிரிவில் சம்­பி­ய­னா­னது.

 

வலைப்­பந்­தாட்ட இரா­ணி­யாக ஹட்டன் நெஷனல் வங்கி வீராங்­கனை கயனி திசா­நா­யக்க முடி­சூ­டப்­பட்டார்.

 

அதி சிறந்த கோல்போடும் (கோல் ஷூட்டர்) வீராங்கனைக்கான விருதை செலான் வங்கி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் வென்றெடுத்தார்.

(Visited 26 times, 1 visits today)

Post Author: metro